நாடு முழுவதும் 150 மாவட்டங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


நாட்டில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், கர்நாடகா, குஜராத், அரியானா, டெல்லி, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் தினசரி தொற்று  பாதிப்பு அதிகரித்து வருகிறது. தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், தொற்று பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை மற்றும் உயர்மட்டக்குழு ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. இதில், 15 சதவீதத்துக்கும் மேல் பரவல் உள்ள 150 மாவட்டங்களிலும் சில தளர்வுகளை மட்டும் அறிவித்து விட்டு முழுமையான ஊரடங்கை அமல்படுத்த மத்திய அரசிடம் சுகாதாரத்துறை பரிந்துரை செய்தது. 


இதுதொடர்பாக மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து மத்திய அரசு அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.