மம்மூட்டியின் பிரம்மயுகம் படம் 50 கோடி வசூல் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


தமிழ் - மலையாளம்:


இந்த ஆண்டும் தமிழில் வெளியான படங்கள் பெரியளவில் ரசிகர்களை கவரவில்லை, பொங்களுக்கு வெளியான கேப்டன் மில்லர், அயலான் , மிஷன்,   மற்றும் பிப்ரவரி மாத தொடக்கத்தில் வெளியான லால் சலாம் என ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப் பட்ட படங்கள் கலவையான விமர்சனங்களையே பெற்றன. இப்படியான நிலையில் மலையாளத்தில் வெளியாகும் படங்களுக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பரவலான வரவேற்பு கிடைத்திருக்கிறது. பிரேமலு, மம்மூட்டி நடித்த பிரம்மயுகம்.


தற்போது வெளியாக பாராட்டுக்களை குவித்து வரும் மஞ்சும்மல் பாய்ஸ் உள்ளிட்டப் படங்கள் திரையரங்குகளில் சக்கை போடு போடுகின்றன. குறைவான பட்ஜெட்டில் எடுக்கப் படும் இந்தப் படங்கள் வசூலில் கல்லா கட்டுகின்றன. தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் பிரம்மயுகம் மற்றும் மஞ்சும்மல் பாய்ஸ் படங்களில் வசூல் நிலவரங்களைப் பார்க்கலாம்.


பிரம்மயுகம்






ராகுல் சதாசிவன் இயக்கத்தில் மம்மூட்டி நடித்துள்ள படம் பிரம்மயுகம். பூதக்காலம் படத்தை இயக்கிய ராஹுல் சதாசிவன் இந்தப் படத்தை இயக்குகிறார். அர்ஜூன் அசோகன், அமல்டா லிஸ், மற்றும் சித்தார்த் இப்படத்தில் நடித்துள்ளார்கள். கிர்ஸ்டோ ஸேவியர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.


நைட் ஷிஃப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் ஒய் நாட் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தை இணைந்து தயாரித்துள்ளன. தமிழ் மற்றும் மலையாளத்தில் வெற்றிபெற்றுள்ள பிரம்மயுகம் படத்தின் வசூல் குறித்த தகவலை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதன்படி  10 நாட்களில் இப்படம் 50 கோடியை வசூல் செய்துள்ளது. பிரமயுகம் படம் 27 கோடி பட்ஜெட்டில் எடுக்கப் பட்டது குறிப்பிடத் தக்கது.


மஞ்சும்மல் பாய்ஸ்






சிதம்பரம் எஸ் பொதுவால் இயக்கத்தில் மலையாளத்தில் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள படம் மஞ்சும்மல் பாய்ஸ். செளபின் சாஹிர், ஸ்ரீநாத் பாஸி , மரியம் ஜார்ஜ் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். கொச்சியில் மஞ்சும்மல் என்கிற ஊரைச் சேர்ந்த ஒரு நண்பர்கள் குழுவுக்கு நிகழ்ந்த உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரியளவில் வரவேற்பைப் பெற்று வரும் இப்படம் 3 நாட்களில் இந்தியளவில்  10 கோடி வசூல் செய்துள்ளது. இப்படத்தின் மொத்த பட்ஜெட் 5 கோடி என்பது குறிப்பிடத் தக்கது.




மேலும் படிக்க : Bramayugam Twitter Review : ராட்சஸன் மாதிரி மம்மூட்டி.. ட்விட்டரில் பிரம்மயுகம் படத்தை பாராட்டும் ரசிகர்கள்