பாலிவுட்டில் இரண்டு படங்களை மட்டுமே எடுத்துள்ள இளம் இயக்குநர் அயன் முகர்ஜி இயக்கத்தில் வெளியான பிரம்மாஸ்திரா திரைப்படம் கே.ஜி.எஃப் திரைப்படத்தை பின்னுக்கு தள்ளி முன்னிலை வகிக்கிறது. 


 



 


சாதனை படைத்த  பிரம்மாஸ்திரா :


ரன்பீர் கபூர் - அலியா பட் நடிப்பில், பெரும் பொருட் செலவில் பான் இந்திய திரைப்படமாக வெளியான இப்படத்தில் நடிகர்கள் அமிதாப் பச்சன், நாகர்ஜூன், மௌனி ராய் மற்றும் ஏராளமான திரை நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.


பாலிவுட் சினிமாக்களை ஓரம்கட்டி தென்னிந்திய சினிமாக்கள் சமீபகாலமாக பான் இந்தியா ரசிகர்களை மகிழ்வித்து பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் சாதனை புரிந்து வரும் நிலையில், பிரம்மாஸ்திரா மீது பாலிவுட் திரையுலகினர் பெரும் நம்பிக்கை கொண்டிருந்தனர். அந்த நம்பிக்கையை சிறிதும் ஏமாற்றாமல் அமோகமான வரவேற்பை பெற்று இந்த ஆண்டு வெளியான பாலிவுட் திரைப்படங்களில் முதல் இடத்தை பிடித்துள்ளது அந்தப்படம். 


 






 


பின்னுக்கு தள்ளப்பட்ட கே.ஜி.எஃப்:


ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரமாண்ட படைப்புகளான கே.ஜி.எஃப்., கே.ஜி.எஃப்  2 படங்கள் தான் இதுவரையில் கூகுளில் அதிகமாக மக்கள் தேடப்பட்ட ஒரு படமாக இருந்து வந்தது. ஆனால் அந்த சாதனையை தற்போது முறியடித்து முன்னிலையில் உள்ளது பிரம்மாஸ்திரா திரைப்படம். இந்தியளவில் மட்டுமின்றி உலகளவிலும் அதிகமான மக்களால் கூகுளில் தேடப்படும் திரைப்படங்களின் பட்டியலில் முதலிடத்தில் பிரம்மாஸ்திரா திரைப்படமும் இரண்டாவது இடத்தின் கே.ஜி.எஃப் திரைப்படமும் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பிரம்மாஸ்திரா பார்ட் 1 டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டு வருகிறது. 


 






 


படத்தை 3 பாகமாக வெளியிட திட்டமிட்டு இருக்கும் இந்தப்படத்தின் இராண்டாம் பாகத்தை உருவாக்குவதற்கான வேலைகளில் படக்குழு தற்போது மும்மரமாக ஈடுபட்டு உள்ளது.