தமிழ் சினிமாவில் விழாக்காலங்களைக் குறிவைத்து திரைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திருப்திப்படுத்துவதும் வசூல்களை அள்ளுவதும் வாடிக்கையாக உள்ளது. இதன் அடிப்படையில் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகி மக்கள் மத்தியில் கவனம் ஈர்த்த படங்கள் என்றால் நடிகர் தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ மற்றும் நடிகர் சிவக்கார்த்திகேயனின் ‘அயலான்’.
தனுஷின் கேப்டன் மில்லரைப் பொறுத்தவரையில் ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆட்சி செய்த காலத்தினை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம். படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகளை மைய்யப்படுத்தி இருந்ததால், திரையரங்களில் தனுஷ் ரசிகர்கள் தனுஷை கொண்டாடி மகிழ்ந்தனர்.
தனுஷ் நடித்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கேப்டன் மில்லர். பிரியங்கா மோகன், ஷிவ ராஜ்குமார், ஜெயபிரகாஷ், சந்தீப் கிஷன், அதிதி பாலன், நிவேதா தாமஸ், ஜான் கொக்கென் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். ஜி.வி பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
சத்யஜோதி ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. கேப்டன் மில்லர் படத்தில் தனுஷின் நடிப்பு மற்றும் ஆக்ஷன் காட்சிகள் ரசிகர்களை கவர்துள்ளது. மேலும் சித்தார்த்தா நூனியின் ஒளிப்பதிவு, ஜி.வி பிரகாஷ் குமாரின் இசை அதிகம் பாராட்டுக்களைப் பெற்று வருகின்றன.
கேப்டன் மில்லர் படம் இந்தியாவில் முதல் நாளில் மட்டும் மொத்தம் 1,428 காட்சிகள் தமிழில் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர் படிப்படியாக ரசிகர்களின் ஆர்வத்தைப் பொறுத்து காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 12ஆம் தேதி வெளியான இந்தப் படத்தின் முதல் வார கலெக்ஷன் மட்டும் ரூபாய் 40.36 கோடி. இந்த விபரத்தினை சாக்நிக் வலைதளம் தனது பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதேபோல் உலகம் முழுவதும் மொத்தம் ரூபாய் 60.7 கோடி வசூல் செய்துள்ளது.
இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ஆர்.ரவிகுமார் அயலான் படத்தை இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து ரகுல் ப்ரீத், கருணாகரன், யோகிபாபு உள்ளிட்டவர்கள் பிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். கே.ஜே. ஆர் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. ஏலியன் ஃபேண்டஸி படமான அயலான் திரைப்படம் நீண்ட நாட்களுக்குப் பிறகு குழந்தைகள் அதிகம் விரும்பிப் பார்க்கும் படமாக அமைந்துள்ளது.
அயலான் படத்தைப் பொறுத்தவரை முதல் நாளில் நாடு முழுவதும் தமிழில் மட்டும் ஆயிரத்து 54 காட்சிகள் திரையிடப்பட்டுள்ளது. அதன் பின்னர் ரசிகர்களின் வருகையை மையப்படுத்தி காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளது. அயலான் திரைப்படம் முன்னதாக நான்கு நாள்களில் ரூ.50 கோடி வசூலை உலகம் முழுவதும் குவித்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்நிலையில், சாக்நிக் வலைதளம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் அயலான் திரைப்படம் உலகம் முழுவதும் கடந்த ஒரு வாரத்தில் இந்தியாவில் மட்டும் ரூபாய் 34.65 கோடி வசூல் செய்துள்ளது என சாக்நிக் வலைதளம் தெரிவித்துள்ளது.
Suriya about Ayalaan: விஎஃப்எக்ஸ் அசத்தல்! அயலான் படக்குழுவினரை பாராட்டித் தள்ளிய நடிகர் சூர்யா!
AK 63: "நல்லவன்னு சொல்வாங்க நம்பிடாதீங்க" மீண்டும் அஜித்குமாருக்கு இசையமைக்கும் தேவிஸ்ரீ பிரசாத்