தனுஷ் நடிக்க வந்து 19 வருடங்கள் ஆன நிலையில் தனுஷ்யை கமர்ஷியல் ஹீரோவாக அறிமுகம் செய்த இயக்குநரும் தனுஷ் ரசிகர் மன்ற தலைவருமான சுப்ரமணிய சிவா தனுஷ் குறித்த அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
'' தனுஷ் நடிக்க வந்த புதுசுல நடிப்பு மேல பெரிய ஆர்வமில்லாம சூழல் காரணமாக 'துள்ளுவதோ இளமை' படத்தில் நடித்தார். இதனால, நடிப்பு பற்றிய பெரிய கனவு இருந்ததில்ல. 'துள்ளுவதோ இளமை' வந்தப்போ அந்த காலத்து இளைஞர்களுக்கு பிடித்த படமா அமைஞ்சிருச்சு. அப்போ, தனுஷ் படமா யாரும் இதை பார்க்கல. ஆனா, பெரிய ட்ரெண்ட் செட் உருவாக்கின படம். இதுல எந்த மாற்று கருத்தும் இல்ல. ஏன்னா, இதுக்கு அப்புறம் நாற்பது படங்கள் இதே ஸ்டைல்ல பூஜை போட்டாங்க. ஆனா, எதுவும் சரியா வொர்க் ஆகல. எந்தவொரு பெர்ஷனாலிட்டி யும் இல்லாத சாதரணமா இருக்குற எந்தவொரு பையனும் நடிகனா வரலாம்னு தனுஷ் நிருப்பிச்சு காட்டுனார். இதுக்கு முன்னாடி இதை ரஜினி மற்றும் விஜயகாந்த் போன்ற ஹீரோஸ் பண்ணுனாங்க. ஹீரோஸூக்குனு இருந்த பிம்பத்தை எல்லாம் உடைச்சிட்டு வெளியே வந்தவங்க இவங்க. சராசரியான ஆட்களும் நடிக்கலாம்னு முன்னுதாரணமா இருந்தவங்க இவங்கதான். பக்கத்து வீட்டு பையனும் நடிக்க வரலாம்னு தனுஷ் உணர்த்தினார். ''
எப்போதுமே தனுஷூக்கு ஞாபகசக்தி அதிகமா இருக்கும். ஒரு டயாலக்ஸ் சீட்டு கொடுத்துட்டா உள்வாங்கிட்டு அழகா நடிச்சு கொடுத்திருவார். ஆரம்பத்துல நடிப்புல பெரிய ஆர்வம் இல்லாம இருந்தாலும் சரியான நேரத்துக்கு ஷூட்டிங் வந்திருவார். ஒரு தயாரிப்பாளர் கஷ்டப்படமா இருக்குறதுக்கு தேவையான எல்லா விஷயத்தையும் செஞ்சு கொடுத்திடுவார். இப்போவும் தன்னுடைய வேலையைதான் சரியா செய்யணும்னு நினைப்பாரே தவிர வேற எதையும் நினைக்க மாட்டார். ஒரு படம் ரிலீஸாகி வெற்றியடைஞ்சாலும் என்னோட வேலையை செஞ்சேன் இதுக்கான ரிலீஸ் கிடைச்சிருக்குனு கடந்து போயிருவார். இதை விட்டுட்டு எதையும் தலையில தூக்கி வெச்சிட்டு ஆடுற மனநிலையெல்லாம் தனுஷூக்கு கிடையாது.
எப்போவும் 'சூப்பர் ஸ்டார்' மருமகன் எனும் அடையாளத்தை தனக்குள்ள வெச்சிக்க மாட்டார். தனக்கான தனி அடையாளத்தோட வரணும்னு நினைச்சுதான் இப்போ இந்த உயரத்துல இருக்கார். இதை தாண்டி எதையும் யோசிச்சது இல்ல. குடும்பத்தோட சொந்தத்தை தொழிலையும் எப்போவும் தொடர்பு படுத்தி பார்த்துக்க மாட்டார். ஆனா, ரஜினி சார் மேல மிகப்பெரிய மரியாதை வெச்சிருக்கார். தனுஷ் ஆன்மிகத்துல பெரிய நம்பிக்கை வெச்சிருக்குறதுக்கு ரஜினி சார் காரணமா இருப்பார்னு நினைக்குறேன். எவ்வளவு உயரத்துக்கு போனாலும் ரஜினி சார் மாதிரியே பெரிய பண்புடையவர் தான் தனுஷூம். பெரிய கூச்சம் சுபாவம் உடையவர்தான் தனுஷ். ஆனா, எந்த இடத்துக்கு வளர்ந்தாலும் இது தொழில் நமக்கு கொடுத்தது. இதை சராசரி வாழ்க்கையோட ஒப்பிட்டு பார்க்க கூடாதுனு நினைச்சிட்டு இருக்குறவன்தான் தனுஷ்.
2002 வருஷத்துல இருந்தே தனுஷை கவனிச்சிட்டு வரேன். அப்போவும் இப்போவும் ஒரே மாதிரியேதான் ரசிகர்கள்கிட்ட இருக்கார். சொல்லப்போனா ரசிகர் மன்றத்துல பதினைஞ்சு இலட்சம் பேர் உறுப்பினராகவும் அஞ்சு இலட்சம் வரைக்கும் உறுப்பினரா இல்லாதவங்களும் இருக்காங்க. நிறைய சகோதர் சகோதரிகளும் இருக்காங்க. இவங்களை சரியான முறையில கட்டயமைச்சிட்டு இருக்கேன். பல இக்கட்டான காலத்தை தாண்டி தான் வந்துட்டு இருக்கோம். இதோ கொரோனா காலத்துல உதவிகள் பண்றதுக்கும். இந்த காலகட்டத்துல ரசிகர் மன்ற தொடர்பான கொண்டாட்டங்கள் எதுவும் வேண்டாம்னு சொல்லவும்தான் இருக்கேன். அரசாங்கம் பேனர்ஸ் எதுவும் வைக்க வேண்டாம்னு சொல்றப்போ இது மாதிரியான செயல்களில் ஈடுபட வேண்டாம்னு அறிவுறுத்தவும் கட்டுகோப்ப வைக்கவும்தான் ஒரு சீனியரா ரசிகர் மன்ற தலைவரா இருக்கேன். இதை பொறுப்பாதான் பார்த்துட்டு வர்றேன்,’’ என பொறுப்புடன் நிறைவு செய்தார்.