Bommai Movie Twitter Review: எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் இணைந்து நடித்துள்ள பொம்மை திரைப்படம் இன்று (ஜூன்.16) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ராதாமோகன் இயக்கியுள்ள இப்படத்தில் சாந்தினி முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.


பொம்மை:


பொம்மை ஒன்றின் மீது காதல் கொள்ளும் நபரின் மனச்சிதைவு, அதன் விளைவுகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாகியுள்ளது. பொம்மை படத்தின் பாடல்களும் ட்ரெய்லரும் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.


மேலும் எஸ். ஜே.சூர்யாவின் நடிப்புக்காகவே தனி ரசிகர் பட்டாளம் உள்ள நிலையில், இப்படத்தில் அவரது வித்தியாசமான நடிப்பை பெரிதும் எதிர்பார்த்து அவரது ரசிகர்கள் காத்திருந்தனர். இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள பொம்மை படத்தைப் பார்த்த ரசிகர்கள் சொல்வது என்ன? எஸ்.ஜே.சூர்யா ரசிகர்களைக் கவர்ந்தாரா எனப் பார்க்கலாம்!


 






எஸ்.ஜே.சூர்யா தரமான பர்ஃபாமன்ஸ் தந்துள்ளதாகவும், யுவன் என்றுமே கிங் ஆஃப் பிஜிஎம் என்றும் தெரிவித்துள்ளார்.


 






 
















”அபியும் நானும், மொழி படங்களை எடுத்த இயக்குநரிடம் இப்படி ஒரு படத்தை எதிர்பார்க்கவில்லை, ஆனால் எஸ்.ஜே.சூர்யா வழக்கம்போல் கலக்கியுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.


ALSO READ | Adipurush Review: பிரபாஸின் அவதாரம் ஆதிபுருஷ்! ரசிகர்களுக்கு சந்தோஷமா? சங்கடமா? இதோ விமர்சனம்!