பொம்மை திரைப்படம் நாளை ரிலீஸாகும் நிலையில், பொம்மை ஒரு வித்தியாசமான காதல் கதை என்று அப்படத்தின் இயக்குநர் ராதா மோகன் தெரிவித்துள்ளார்.
தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பொம்மை படத்தின் இயக்குநர் ராதமோகன் முன்னதாக படம் குறித்து பேட்டியளித்தார், அதில் அவர் தெரிவித்திருப்பதாவது: “நாகர்கோவிலில் ஒரு ஷோ ரூமில் ஒரு பொம்மையைப் பார்த்தேன். நிஜமாகவே ஒரு பெண் நின்று பார்ப்பது போன்று இருந்தது. அது என் மனதில் ஆழமாக பதிந்து விட்டது.
அதைப் பற்றி யோசிக்க யோசிக்க, அது ஒரு கதையாக உருவானது. பொம்மை வித்தியாசமான கோணத்திலான ஒரு காதல் கதை. ஒரு பொம்மைக்கும் ஹீரோவுக்கும் ஏன் காதல் வருது, அதற்கான காரணம் என்ன இந்தக் கேள்விகள் எல்லாம் அனைவரும் திரையரங்கிற்கு சென்று பொம்மை படம் பார்க்க வேண்டும் என்றும் அனைவருக்கும் பிடிக்கும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பொம்மை திரைப்படம் கடந்த 2020-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. கொரோனா காரணமாக கொரோனா காரணமாக இப்படத்தின் பணிகள் தள்ளிப்போய் கொண்டே இருந்தது. ஒருவழியாக படத்தின் ஷூட்டிங், போஸ்ட் ப்ரொடக்ஷன் உள்ளிட்ட அனைத்து வேலைகளும் முடிந்து படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
தமிழில் அபியும், நானும், மொழி, பயணம், காற்றின் மொழி உள்ளிட்ட படங்களை இயக்கிய ராதா மோகன் இந்தப்படத்தை இயக்கி இருக்கிறார். யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப்படத்தில் கதாநாயகியாக ப்ரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார்.ஏற்கனவே மான்ஸ்டர் படத்தில் எஸ்.ஜே. சூர்யா, ப்ரியா பவானி சங்கர் ஜோடி இணைந்து நடித்துள்ள நிலையில், தற்போது மீண்டும் பொம்பை படத்தில் ஜோடி சேர்ந்துள்ளனர்.
இப்படத்தில் அப்டேட்டுகளும் அடுத்தடுத்து வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த வாரம் பொம்மை படத்தின் டிரைலர் வெளியானது. இந்த படத்தின் டிரைலரை இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டார். சமீபத்தில் இந்த படத்தின் முதல் பாடலான ’முதல் முத்தம்' வெளியாகி இருந்தது. இதனால் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்தது.
இந்த டிரெய்லரில் எஸ்.ஜே.சூர்யா-பிரியா பவானி சங்கர் இடையேயான லிப்லாக் காட்சியும் இடம்பெற்றிருந்தது, இது ஒரு வித்தியாசமான காதல் கதை என்று பொம்மை படத்தின் இயக்குனர் கூறியுள்ளது ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தி உள்ளது. இந்நிலையில் நாளை பொம்மை திரைப்படம் ரிலீஸ் ஆகின்றது.
மேலும் படிக்க