Ajith | நடிகர் அஜித்குமார் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட மர்மநபர் ஒருவர் நடிகர் அஜித்குமார் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.

Continues below advertisement

தமிழ்த்திரையுலகின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் அஜித்குமார். சென்னை, நீலாங்கரையில் நடிகர் அஜித்குமார் தனது மனைவி ஷாலினி மற்றும் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். வலிமை படத்தில் நடித்துவரும் அவர், தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். இந்த நிலையில், சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட மர்மநபர் ஒருவர் நடிகர் அஜித்குமாரின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.

Continues below advertisement