பாலிவுட் பாடகரும் இசையமைப்பாளருமான ராகுல் ஜெயின் மீது ஆடை வடிவமைப்பாளர் பாலியர் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


2014 ஆம் ஆண்டு எம்டிவி அலோஃப்ட் ஸ்டார் ஷோ நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த ராகுல் ஜெயின் தொடர்ந்து தெரி யாத், ஆனே வாலே கல், ஸ்பாட்லைட் ஆகிய வெப் சீரிஸ்களில் பாடல்களைப் பாடியுள்ளார். மேலும் காகஸ்,ஜூத்தா கஹின் கா போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ள இவர் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார். 


மும்பையில் உள்ள ஓஷிவாரா காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட 30 வயதான பெண் ஆடை வடிவமைப்பாளர் அளித்த புகாரில் ராகுல் ஜெயின் இன்ஸ்டாகிராமில் தன்னைத் தொடர்பு கொண்ட நிலையில் எனது வேலையைப் பாராட்டினார். இதனையடுத்து என்னை தன்னுடைய பெர்சனல் ஆடை வடிவமைப்பாளராக நியமிப்பதாக கூறிய அவர்  அந்தேரியின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள அவரது அபார்ட்மெண்டிற்கு வரச் சொன்னார். 






இதனை நம்பிய நான் ஆகஸ்ட் 11 ஆம் தேதி அங்கு சென்றேன். அப்போது ராகுல் ஜெயின் தனது பிளாட்டைச் சுற்றிக் காட்டினார். அப்போது படுக்கையறையில் வைக்கப்பட்டிருந்த பொருட்களை காட்டுவதாக கூறி அழைத்துச் சென்று என்னை பாலியல் வன்கொடுமை செய்தார். இதனைத் தடுக்க நான் முயன்ற போது அவர் என்னை கடுமையாக தாக்கினார். மேலும் என்னிடம் இருந்த அவர் சம்பந்தப்பட்ட ஆதாரங்களையும் அழிக்க முயன்றதாக அப்பெண் தெரிவித்துள்ளார்.


இதனையடுத்து ராகுல் மீது ஐபிசி  பிரிவு 376 (கற்பழிப்பு), 323 (ஒரு நபரை தானாக முன்வந்து காயப்படுத்துதல்), 506 (மிரட்டுதல்) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் இதுவரை அவரை கைது செய்யவில்லை. அதேசமயம் அப்பெண் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த ராகுல் ஜெயின், தனக்கு அப்பெண்ணை தெரியாது என்றும், அவர் கூறிய  குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை, ஆதாரமற்றவை எனவும் தெரிவித்துள்ளார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண