நடிகர் விஜய் மகேஷ்பாபுக்கு சொந்தமான திரையரங்கில் படம் பார்த்துள்ளார்.
‘வாரிசு’ படத்தின் படப்பிடிப்பில் கிடைத்த பிரேக்கில் ஹைதராபாத்தில் நடிகர் மகேஷ் பாபுவுக்கு சொந்தமான தியேட்டரில், ‘பிம்பிசாரா’ படத்தை பார்த்து இருக்கிறார் நடிகர் விஜய். மல்லிதி வசிஷ்டா இயக்கி இருக்கும் இந்தப்படத்தில் நடிகர் நந்தமுரி கல்யாண் ராம் கதாநாயகனாக நடித்துள்ளார்.
விஜய் தற்போது இயக்குனர் வம்ஷி பைடிப்பள்ளியுடன் இயக்கத்தில் "வாரிசு" திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டு இருக்கிறது. படத்திற்கான ஷூட்டிங் ஷெட்யூல் வைசாக்கில் நடைபெற்று வருவதால் படப்பிடிப்பு குழுவினர் அங்கு முகாமிட்டுள்ளனர். அவ்வப்போது ‘வாரிசு’ படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அண்மையில் மருத்துவமனையில் பிரபு, விஜய் நடித்த காட்சி வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலானது.
பொங்கல் 2023 ரிலீஸ்:
வாரிசு திரைப்படத்தில் ரொமான்ஸ், ஆக்ஷன், காமெடி, அதிரடி, செண்டிமெண்ட் என அனைத்தின் கலவையாக உருவாக்கப்பட்டுள்ள ஒரு கமர்சியல் திரைப்படம். சினிமா ரசிகர்களுக்கு நிச்சயம் இது ஒரு திரை விருந்தாக அமையும். இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பரில் முடிவடைந்து 2023 பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செம்ம ஜோடி:
வாரிசு திரைப்படத்தில் விஜயின் ஜோடியாக இணைகிறார் ராஷ்மிகா மந்தனா. தமிழ் திரையுலகின் மிகவும் முக்கியமான ஹீரோவான இளைய தளபதி விஜயுடன் திரையை பகிர்வதில் மிகவும் உற்சாகமாக காணப்படுகிறார் ராஷ்மிகா. இப்படம் ஒரு முழுமையான தமிழ் படம் மற்றும் தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்யப்படும் என்கிறார்கள் பட குழுவினர். இப்படத்தில் பிரகாஷ்ராஜ், குஷ்பூ, சங்கீதா, பிரபு, ஜெயசுதா, யோகி பாபு, சம்யுக்தா, ஷியாம் உள்ளிட்ட ஒரு பெரிய திரை பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர். தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் சிங்கள் ட்ராக் விரைவில் வெளியிடப்படும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கின்றனர்.