மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் நடிகை தமன்னா செய்த செயல் ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது. 


ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இந்திய திரைப்பட விழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்தியாவில் ஒளிபரப்பாகும் மிக முக்கிய பாராட்டப்பட்ட முக்கிய திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் வெப் சீரிஸ்கள் ஆகியவை இடம் பெறுவது வழக்கம். இவ்விழாவின் சிறப்பம்சங்களில் ஒன்று விருது வழங்கும் நிகழ்வாகும். அந்த வகையில் இந்தாண்டுக்கான திரைப்பட விழா தற்போது நடைபெற்று வருகிறது. 






இந்த விழாவில் சிறந்த திரைப்படமாக 83, சிறந்த இயக்குனராக  ஷூஜித் சிர்கார் (சர்தார் உதம்) மற்றும் அபர்ணா சென் (தி ரேபிஸ்ட்), சிறந்த நடிகராக ரன்வீர் சிங் (83), சிறந்த நடிகையாக ஷெபாலி ஷா (ஜல்சா), சிறந்த தொடராக மும்பை டைரிஸ் 26/11, வாழ்நாள் சாதனையாளர் விருது  கபில் தேவுக்கும், சினிமாவில் லீடர்ஷிப் விருது  அபிஷேக் பச்சனும் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. இதன் விருது வழங்கும் விழா ஆகஸ்ட் 14 ஆம் தேதி நடைபெற்றது. 






இதனிடையே இதன் தொடக்கவிழாவில் நடிகைகள் தமன்னா, டாப்சி, இயக்குநர் அனுராக் காஷ்யப் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது நிகழ்ச்சியின் ஒரு அங்கமாக குத்துவிளக்கு ஏற்றும் வைபவம் நடைபெற்றது. அதில் டாப்ஸியை தொடர்ந்து விளக்கு ஏற்ற அழைக்கப்பட்டார். அங்கு வந்த தமன்னா தனது காலணிகளை கழற்றி வைத்து விளக்கை ஏற்றி வைத்தார்.அருகில் இருந்த பெண் இதனைப் பாராட்டி கருத்து தெரிவித்தார், அதற்கு தமன்னா, "இது தென்னிந்திய பாரம்பரியம்" என்று பதிலளித்தார். தமன்னாவின் இந்த செயலை அவரது ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண