படங்களில் நடிக்க முயற்சி செய்து கொண்டிருந்த போது, பிரபல தயாரிப்பாளர் ஒருவர் நாய் ஒன்றை தன் மீது ஏவி விட்டதாக பேசி இருக்கிறார். 


மொராக்கோவில் நடைபெற்ற மரகேச் சர்வதேச திரைப்பட விழாவில் ரன்வீர் சிங் கலந்து கொண்டார். அந்த விழாவில் அவருக்கு கோல்டன் விருது வழங்கப்பட்டது. அப்போது அவர், பாலிவுட்டில் தன்னுடைய பயணம் பற்றியும், அப்போது தான் சந்தித்த கஷ்டங்கள் பற்றியும் பேசினார். 


இது குறித்து பேசிய அவர்,  “பாலிவுட்டில் நான் நடிகனாக முயற்சி செய்து கொண்டிருந்த காலம் அது. ஒரு பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் ஒருவர் அவர் நடத்திய விருந்து ஒன்றிற்கு அழைத்திருந்தார். நான் அங்கு சென்றிருந்தேன். அப்போது அவர் வேடிக்கைகாக என் மீது நாயை ஏவி விட்டார்.  இதே போல காஸ்டிங் கோச் ஒருவர் என்னை அழைத்திருந்தார். அங்கு நான் சென்றேன். அப்போது அவர் என்னிடம் நீ கடினமாக உழைப்பவனா? இல்லை புத்திசாலித்தனமாக உழைப்பவானா? என்று கேட்டார்.


அதை கேட்ட போது என்னை பற்றி நான் யோசித்தேன். நான் கடினமாக உழைப்பவன் என்று தோன்றியது. உடனே நான் என்னை கடினமாக உழைப்பவன் என்று கூறினேன். அதைக்கேட்ட அவர், டார்லிங் புத்திசாலித்தனமாக இரு.. செக்ஸியாக உன்னை காண்பித்துக்கொள் என்றார். அந்த மூன்றரை வருடங்களில் இதுபோன்ற எல்லா அனுபவங்களையும் நான் பெற்றிருக்கிறேன். அந்தக் காலகட்டம்தான் இப்போது எனக்குக் கிடைத்துள்ள வாய்ப்புகளுக்கு மதிப்பளிக்க வைத்தது என்று நான்நினைக்கிறேன்” என்று பேசி இருக்கிறார். 


 






ரன்வீர் சிங், சிறு வயதுலேயே மேடை நாடகம், பள்ளி விழாக்கள் என நடிப்பு மீது அதீத ஆர்வம் உடையவராக இருந்திருக்கிறார். சினிமா மீது அதீத ஈடுபாடு கொண்டதால் தனது கெரியரை பாலிவுட் நோக்கி திருப்பினார். 2010 ஆம் ஆண்டு வெளியான  ‘பேண்ட் சர்மா பாராத்’ என்னும் திரைப்படம் மூலம் அறிமுகமனார். அனுஷ்கா ஷர்மாவிற்கு ஜோடியாக நடித்த ரன்வீருக்கு முதல் படமே கம்ர்ஷியல் ஹிட்டானது. நகைச்சுவை காதல் படமான அந்த படத்தில் அபார நடிப்பை வெளிப்படுத்தியதால், அறிமுக நடிகருக்கான ஃபிலிம்பேர் விருதும் கிடைத்தது. 


ரன்வீர் சிங்கின் நடிப்பிற்கு சான்றாக ஏகப்பட்ட படங்கள் இருந்தாலும் பத்மாவதி திரைப்படத்தில் அவரது நடிப்பு அதிகமாக பாராட்டப்பட்டது. அந்த படம் சிறந்த நடிகருக்கான ஃபிலிம்பேர் விருதை பெற்றுத்தந்தது. இதுவரையில் ரன்வீர்  ஐந்து ஃபிலிம்பேர் விருதுகள், 6 சர்வதேச திரைப்பட விருதுகள், 4 ஸ்டார் கிரீன் விருதுகள், 2 ஸ்டார் டஸ்ட் விருதுகள் மற்று  பல சின்னத்திரை விருதுகளை பெற்றுள்ளார்.


ரன்வீர் சிங் எப்போதுமே வித்தியாசமாக உடை அணியக்கூடியவர். பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும் கூட அவர் அதனை அத்தனை நம்பிக்கையுடன் அணிந்து வருவதை பார்த்தால் ஃபேஷன் மீது ரன்வீருக்கு இருக்கும்  ஈடுபாடு வெளிப்படையாகவே தெரியும். உடைக்கு ஏற்ற மாதிரி சிகை அலங்காரத்தை மாற்றுவதுதான் ரன்வீரின் ஸ்டைல். பாலிவுட்டின் ஸ்டைல்  ஐகானாக ரன்வீர் கொண்டாடப்படுகிறார். ரன்வீர் சிங் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனை 2013 முதல் காதலித்து வந்தார். நீண்ட நாட்களாக காதலில் இருந்த ஜோடிகள் கடந்த 2018 ஆம் ஆண்டு பிரம்மாண்டமான முறையில் திருமணம் செய்துக்கொண்டனர்