முதன்முறையாக இந்தியாவின் நுழைவு வாயிலில் நடைபெற்ற கிறிஸ்டியன் டியோர் ஃபால் 2023 ஃபேஷன் ஷோவில் இந்திய பிரபலங்கள் மற்றும் ஏ-லிஸ்ட் நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.


பேஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவார்கள்


மும்பையில் உள்ள தாஜ்மஹால் ஹோட்டலில் அழைக்கப்பட்ட விருந்தினர்களுக்கு 'பேஷன் பிராண்ட்', வரவேற்பு விருந்து அளித்தது. பிரபல விருந்தினர்கள் சிமோன் ஆஷ்லே, அனுஷ்கா ஷங்கர், பூர்ணா ஜெகநாதன் மற்றும் சரித்ரா சந்திரன் உள்ளிட்ட அனைவரும் நடத்தப்பட்ட விருந்தில் கலந்து கொண்டனர். அம்பானிஸ், சோனம் கபூர் அஹுஜா, அனுஷ்கா ஷர்மா மற்றும் விராட் கோலி, கரிஷ்மா கபூர், மீரா ராஜ்புத், அனன்யா பாண்டே, ஸ்வேதா பச்சன், நடாஷா பூனாவாலா உள்ளிட்டோர் இதில் ரேம்ப் வாக் செய்தனர்.


இந்த பிரெஞ்சு பேஷன் பிராண்டின் மிகப்பெரிய நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களில் ஒருவராக மூத்த இந்தி நடிகை ரேகாவும் வந்திருந்தார்.






வணக்கம் வைத்து விழுந்த ரேகா


இன்ஸ்டாகிராம் பதிவொன்றில் ரேகா வணக்கம் வைக்கும் தோரணையில், பின்னால் சாய்ந்து, விழுந்த வீடியோவைப் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அவர் தனது ட்ரேட்மார்க் ஸ்டைலான புடவை அணிந்து வந்திருந்தார். அவர் இளஞ்சிவப்பு காஞ்சிவரம் பட்டுப் புடவையுடன், மல்லிப்பூ வைத்து, ஒரு தங்கப் பொட்லி பையை கையில் வைத்திருந்தார். 


தொடர்புடைய செய்திகள்: GT vs CSK IPL 2023: ஐ.பி.எல். தொடக்க போட்டி..! நேருக்கு நேர் மோதும் சென்னை - குஜராத்..! வெற்றியுடன் தொடங்கப்போவது யார்?


நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சந்திப்பு


இந்த விழாவுக்கு முன்பு, கிறிஸ்டியன் டியரின் கிரியேட்டிவ் டைரக்டரான மரியா கிராசியா சியூரியை ரேகா சந்தித்தார். இருதினம் முன்பு அவர் ரேகாவுடன் வெள்ளை நிற சேலை அணிந்திருந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அவர் தனது பதிவில், "நேற்றிரவு ரேகா ஜியை முதன்முறையாக சந்தித்ததில் நான் மிகவும் மகிழ்ந்தேன். இந்தியாவின் மிகச்சிறந்த பெண்மணி மற்றும் அபாரமான நடிகைகள். உங்களை சந்திக்க வாய்ப்பாளித்ததற்கு நன்றி, இது ஒரு உண்மையான மரியாதை," என்று எழுதியிருந்தார்






ரேகா நடித்த திரைப்படங்கள்


பழம்பெரும் நடிகை ரேகா சிறுவயதில் இருந்தே நடித்து வருகிறார். அவரது முதல் இந்தி திரைப்படம் சவான் படோன் (1970) ஆகும். கர், முகதர் கா சிக்கந்தர், குப்சூரத், அகர் தும் நா ஹோடே, கலியுக், உத்சவ் மற்றும் கூன் பாரி மாங் போன்ற படங்களில் நடித்ததற்காக அவர் மிகவும் பிரபலமாக அறியப்படுகிறார். 1981 இல் முசாபர் அலியின் உம்ராவ் ஜான் திரைப்படத்தில் விலைமாதுவாக நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை வென்றார். அவர் கடைசியாக 2014 இல் சூப்பர் நானி திரைப்படத்தில் நடித்தார். அதன் பின்னர், அவர் ஷமிதாப் (2015) மற்றும் யம்லா பக்லா ஆகிய படங்களில் சிறப்புத் தோற்றங்களில் நடித்துள்ளார்.