திண்டுக்கல்லில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த முறுக்கு வியாபாரி அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டி படுகொலை.. தடுக்கச்சென்ற மகனுக்கு வெட்டு.. மருத்துவமனையில் அனுமதி.. போலீசார் விசாரணை.


IPL 2023 RCB vs MI: பெங்களூர் vs மும்பை அணிகள் இன்று மோதல்.. 15 ஆண்டுகளாக ஐபிஎல் வரலாறு சொல்வது என்ன?


திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோவில் நாராயண பிள்ளை தோட்டத்தைச் சேர்ந்த முருக்கு வியாபாரி அப்துல்லத்தீப் வயது 47. இவரது மனைவி நிஷா மகன் சாகுல் ஹமீதுதௌபிக் வயது 17 இவர்கள்  வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, இன்று அதிகாலை கதவை தட்டும் சத்தம் கேட்டு லத்திப் கதவை திறந்து உள்ளார். அப்பொழுது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நபர்கள் வீடு புகுந்து பயங்கர ஆயுதங்களால் லத்திப்பை வெட்டி படுகொலை செய்தனர்.


’தமிழ் தேசிய இனம் தூக்கி சுமக்கும் உணர்வு... வெற்றிமாறனின் மகுடத்தில் வைரக்கல்...’ - விடுதலை படத்தை பாராட்டிய சீமான்!


தந்தையை தாக்குவதை தடுக்கச்சென்ற மகன் தௌபிக்கையும் வெட்டிவிட்டு தப்பி சென்றனர்.  படுகாயம்  அடைந்த தௌபிக்  திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக திண்டுக்கல் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  தொழில் போட்டி காரணமாகவா அல்லது முன் பகை காரணமாகவ இந்த படுகொலை நடந்ததா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




பழனி அருகே ஒருவரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டியதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவ மனையில் அனுமதி ,போலிசார் விசாரணை 


திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பாலசமுத்திரம் மேற்கு தெருவை சேர்ந்தவர் விஸ்வநாதன் (22) இவர் இன்று அதிகாலை மேற்கு தொடர்ச்சி மலையொட்டியுள்ள பகுதியான ரெங்கசாமி கரடு யானை பாறையில் மர்ம நபர்களால் அரிவாளால் வெட்டி காயப்படுத்தப்பட்டுள்ளார்.  காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்துள்ளார் .


Viduthalai: "காசுக்காக இப்படியான கேரக்டரை பண்ணாதீங்க" .. விடுதலை படத்தில் நடித்ததால் சேத்தனுக்கு வந்த எதிர்ப்பு


அந்த வழியே சென்றவர்கள் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்த காவல் துறையினர் படுகாயமடைந்த விஸ்வநாதனை பழனி அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டார்.இதுகுறித்து தாலுகா போலிசார் முன் விரோதம் காரணமாக கொலை முயற்சியில் வெட்டப்பட்டரா அல்லது வேறேதும் காரணமா? என  வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறனர்.அதிகாலையில் ஒருவரை அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண