பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடத்திய நிர்வாண போட்டோஷூட் தான் இப்போது சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாகி உள்ளது. ரன்வீர் சிங் தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் தனது பன்முக நடிப்பால் ரசிகர்களின் மனதை கொள்ளை கொள்வார்.


சமீபத்தில் இந்திய அணி உலகக்கோப்பை வென்றதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 83 திரைப்படம் அமோக வெற்றி பெற்றது. இதில் ரன்வீர் சிங் அப்போதைய இந்திய அணியின் கேப்டனாக இருந்த கபில் தேவ் கதாபாத்திரத்தில் மிக சிறப்பாக நடித்திருந்ததை தொடர்ந்து அவருக்கு பாராட்டுகள் குவிந்தன. 


 



ரன்வீர் சிங் மாடல் உலகம்:


சினிமாவில் நடிக்கும் அதே சமயம் அவருக்கு மாடலிங் மீதும் ஈர்ப்பு அதிகம். அதற்காக அவர் அவ்வப்போது போட்டோஷூட் நடத்துவது வழக்கம். அதற்காக தனது ஹேர் ஸ்டைல், ட்ரெஸ்ஸிங் என பல வெரைட்டி காட்டுவார். அந்த வகையில் சமீபத்தில் அவர் நடத்திய நிர்வாணா போட்டோஷூட் அவரின் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சமூகவலைதளங்களில் அவரின் இந்த துணிச்சலான செயலை சிலர் விரும்பினாலும் பலர் மீம்ஸ் மூலம் ரன்வீரை காயப்படுத்தி வருகின்றனர். ஒரு பத்திரிகையின் அட்டைப் படத்துக்காக அவர் கொடுத்த போஸ் தான் இந்த வைரலாக நிர்வாண போஸ்.  


எனினும் இது ஒன்றும் பாலிவுட்டுக்கு புதிதல்ல. ரன்வீர் சிங்குக்கு முன் இதேபோல் நிர்வாண ஃபோட்டோஷூட் செய்த நடிகர் நடிகைகளின் பட்டியலைக் காணலாம்.


ஜான் ஆபிரகாம்:


 






பாலிவுட்டின் பிரபலமான நடிகரான ஜான் ஆபிரகாம், கடந்த ஆண்டு மார்ச் மாதம் அவரின் புகைப்படம் ஒன்றினை சமூக வலைதளத்தில் வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹோட்டலில் தலையணையால் தன்னை மூடிக்கொண்டு இருப்பது போன்ற புகைப்படம் அது. 


கல்கி கோச்லின்: 


2017ஆம் ஆண்டு தேவ் டி நடிகை கல்கி கோச்லின் தனது நிர்வாண புகைப்படம் ஒன்றினை போட்டோஷூட் எடுத்து அவரின் பார்வையை தன மீது திருப்பினார். இந்த போட்டோவிற்கு நடிகை ‘நிழலுக்கும் வெளிச்சத்துக்கும் இடையில் பாதி’ என பதிவிட்டு இருந்தார். 


ஈஷா குப்தா: 


 






மிகவும் துணிச்சலான, கவர்ச்சியான நடிகை ஈஷா குப்தா. அவர் எப்பொழுதும் உடல் பொசிட்டிவிட்டி குறித்து மிகவும் வெளிப்படையாக பேச கூடியவர். மேலும் அடிக்கடி நிர்வாண போட்டோஷூட் எடுத்து அதை சமூக வலைத்தளங்களில் பகிரவும் செய்வார் ஈஷா. ரசிகர்களை மூச்சடைக்கக் கூடிய தைரியமான புகைப்படங்களை வெளியிடுவதில் தேர்ந்தவர். 


மிலிந்த் சோமன்


 






2020ஆம் ஆண்டு தனது 55ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக நடிகர் மற்றும் மாடல் மிலிந்த் சோமன் நிர்வாணமாக கடற்கரையில் ஓடும் புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை அவரது மனைவி அங்கிதா கோன்வார் எடுத்துள்ளார்.