பிரபல பாலிவுட் நடிகர் சங்கி பாண்டே - பாவனா பாண்டேவின் மகள் அனன்யா பாண்டே. 'ஸ்டுடென்ட் ஆஃப் தி இயர் 2' படத்தின் மூலம் அறிமுகமானவர். முதல் படத்திலேயே மிகவும் பிரபலமான நடிகையாக ஏராளமான ரசிகர்களைப் பெற்றார் அனன்யா பாண்டே. முன்னதாக நடிகர் விஜய் தேவரகொண்டா ஜோடியாக 'லைகர்' படத்தின் மூலம் பான் இந்தியன் நடிகையானார் அனன்யா. பூரி ஜெகநாத் இயக்கத்தில் ஒரு கம்ப்ளீட் மசாலா திரைப்படமாக வெளியான படம் லைகர். இருப்பினும் படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாமல் தோல்வியை சந்தித்தது. அதைத் தொடர்ந்து அவர் நடித்த கெஹ்ரையான் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.


இந்நிலையில், “அடுத்தடுத்து படங்கள் தோல்வியடைந்தால் வருத்தமில்லை, ஏன் என்றால் ஒவ்வொரு படத்தின் மூலம் நான் பலவற்றை கற்றுக்கொள்கிறேன்” எனக் கூறியிருந்தார் அனன்யா பாண்டே. 24 வயதான அனன்யா தொடர்ந்து பல கிசுகிசுக்களில் சிக்கி வருகிறார். அந்த வகையில் முன்னதாக நடிகர் விஜய் தேவரகொண்டா உடன் சில நாள்கள் அவர் டேட்டிங் செய்து வந்ததாகத் தகவல்கள் பரவி வந்தன. 


 



தற்போது அனன்யா பாண்டே தன்னை விடவும் 13 வயது மூத்த நடிகரான பாலிவுட் நடிகர் ஆதித்யா ராய் கபூருடன் டேட்டிங் செய்து வருகிறார் என்றும், இருவரும் நெருக்கமாக பல பொது இடங்களில் வலம் வருகின்றனர் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது. அதை உறுதிப்படுத்தும் வகையில் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பாலிவுட் வட்டாரத்தில் கவனமீர்த்துள்ளது.


 






ஸ்பெயினில் நடைபெறும் இசைக்கச்சேரி ஒன்றில் கலந்து கொள்வதற்காக இருவரும் சென்றுள்ளார்கள் என்பது அவர்களின் சோசியல் மீடியா பக்கங்கள் மூலம் நிரூபணமாகியுள்ளது. இருப்பினும் இந்த செய்தியை அனன்யா பாண்டேவின் தாயார் பாவனா பாண்டே நிராகரித்து வருகிறார்.


“சினிமா செலிபிரிட்டிகள் இது போல கிசுகிசுவில் சிக்குவது வழக்கமான ஒன்றுதான். அனன்யா இதுவரையில் சிங்கிளாக தான் உள்ளார்” என அவர் விளக்கம் கொடுத்துள்ளார். அனன்யா பாண்டே இந்த வதந்தி குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்கையில், ”என்னை விடவும் எனது ரசிகர்கள் எனது காதல் வாழ்க்கை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள். அதுவும் ஒரு வகையில் நல்லது தான். அவர்கள் யாராக இருக்கக்கூடும் என யூகித்து கொண்டே இருக்கட்டும்” என பதில் அளித்துள்ளார். 


இருப்பினும் அனன்யா பாண்டே - ஆதித்யா ராய் கபூர் டேட்டிங் விவகாரம் பாலிவுட் வட்டாரத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.