இதயத்தை நெகிழ வைக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. அந்த வீடியோவில், பரபரப்பான சூழலில் வெள்ளம் கரைபுரண்டு ஒடும் நேரத்தில், ஒரு பாலத்தில் இருந்து ஒரு நபர் ஏணியில் ஏறுகிறார், அவர் கையில் ஒரு நாய்க்குட்டி உள்ளது. இதை கண்ட அனைவருமே உருகி வருகின்றனர்.
நாய்க்குட்டியை மீட்ட தீயணைப்புத்துறை
குடா லாகூர் பாலத்தின் கீழ் வெள்ளம் போன்ற சூழ்நிலையில் நாய் சிக்கித் தவித்துவந்த நிலையில், தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று ஏணி அமைத்து அந்த நாயை காப்பாற்றி உள்ளனர். உயிரைக் காப்பாற்றிய அந்த நபரின் உதவிக்காக இணையம் அவரைப் பாராட்டி தள்ளியது. இந்த மீட்புப் பணியைக் காட்டும் வீடியோவை சண்டிகர் போலீஸார் ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர்.
இந்த வீடியோவை சண்டிகரில் உள்ள மூத்த காவல் கண்காணிப்பாளர் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் அவர், நாயைக் காப்பாற்றும் முயற்சிக்கு தீயணைப்பு மற்றும் காவல் துறையினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
சண்டிகர் காவல்துறை வெளியிட்ட வீடியோ
"சண்டிகர் போலீஸ் குழுவின் உதவியுடன் நாய்க்குட்டியை மீட்ட தீயணைப்புத் துறையின் குழுவிற்கு பாராட்டுகள், அதிக நீர் வரத்தால் குடா லாகூர் பாலத்தின் கீழ் சிக்கித் தவித்த நாய்க்குட்டி மீட்கப்பட்டது" என்று அவர்கள் எழுதினர். அதோடு அந்த ட்வீட்டில் சில ஹேஷ்டேக்குகளையும் சேர்த்தார். "#EveryoneIsImportantForUs #LetsBringTheChange #WeCareForYou" ஆகிய ஹேஷ்டேக்குகள் இணைக்கப்பட்டிருந்தன. 45-வினாடிகள் கொண்ட இந்த வீடியோ கிளிப்பில், ஒருவர் நடுவழியில் சாய்ந்த ஏணியில் ஏறி, ஒரு கையில் நாய்க்குட்டியை பிடித்துக் கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது.
லட்சம் பேரை சென்றடைந்து வைரலாகும் விடியோ
நாய் கிட்டத்தட்ட உச்சியை அடைந்த பிறகு அங்கு கூடியிருந்த மற்ற அதிகாரிகள் நாய்க்குட்டியை வாங்கிக்கொண்டனர், பின்னர் மீட்க சென்ற நபர் பாதுகாப்பாக வெளியே வந்தார். அதே நேரத்தில் பாலத்தின் அடியில் தண்ணீர் பொங்கி வழிவதைக் விடியோவில் காணலாம். ஜூலை 10 ஆம் தேதி வெளியிடப்பட்ட இந்த வீடியோ, 98,000 பேரால் பார்க்கப்பட்டுள்ளது. மேலும், ட்வீட் 1,500 லைக்குகளை நெருங்கியுள்ளது. மக்கள் 1500 க்கும் மேற்பட்ட கமென்ட்களை பதிவு செய்துள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் அவரது துணிச்சலான முயற்சிகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
சண்டிகர் கனமழை
ஜூலை 10 அன்று, சண்டிகர் கிட்டத்தட்ட 23 ஆண்டுகளுக்குப் பிறகு அதிகபட்சமாக 24 மணிநேர மழையைப் பதிவு செய்தது. மேலும், யூனியன் பிரதேசத்தின் வரலாற்றில் முதல் முறையாக, சுக்னா ஏரி நிரம்பியுள்ளது. இதற்கிடையில், பஞ்சாபில் உள்ள 14 மாவட்டங்களில் குறைந்தது 1,058 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது. இதில் ரூப்நகரில் 364, சாஹிப்சாதா அஜித் சிங் நகரில் 268, பாட்டியாலாவில் 250, ஜலந்தரில் 71, மோகாவில் 30, ஹோஷியார்பூரில் 25, லூதியானாவில் 16, சங்ரூர் மற்றும் ஃபெரோஸ்பூரில் தலா மூன்று, டர்ன் தரனில் 6 கிராமங்கள் அடங்கும். ஃபதேகர் சாஹிப், சாஹிப்சாதா அஜித் சிங் நகர், ஷாஹீத் பகத் சிங் நகர், தர்ன் தரன் மற்றும் ஜலந்தர் ஆகிய இடங்களில் கால்நடைகள் இறந்துள்ளன. ஷாஹீத் பகத் சிங் நகரில் சுமார் 6,300 கோழிகளும், சிர்ஹிந்த் நகரில் எட்டு பன்றிக்குட்டிகள், ஏழு பன்றிகள் மற்றும் ஒரு ஆடு வெள்ளத்தால் இறந்துள்ளதாக கூறப்படுகிறது.