இன்று சன்னி லியோன் தனது 42வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். தன் மனதிற்கு சரி என்று பட்ட எந்த முடிவையும் எடுப்பதற்கும் தன் மேல் வைக்கப்படும் விமர்சனங்களை எதிர்கொள்வதற்கு எப்போதும்  தயங்கியது இல்லை சன்னி லியோன். சன்னி லியோன் தொடர்ச்சியாக நிறைய நிகழ்ச்சிகளில் பேசி தனது தனிப்பட்ட மற்றும் சினிமா வாழ்க்கையைப் பற்றி பேசி வருபவர். இந்த இடங்களில் இவர் பேசும் கருத்துக்களில் இருந்து நாம் அவரிடம் கற்றுகொள்ள வேண்டியது நிறைய இருக்கின்றன.


2012 ஆம் ஆண்டு சன்னி ஆபாச பட துறைபயில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். மிக இளைய வயதிலேயே சன்னி பார்ன் இண்டஸ்ட்ரியில் நடிக்கத் தொடங்கிவிட்டார். தனது இந்த முடிவிற்கு பின்னிருந்த உளவியல் ரீதியிலான காரணங்களை பி.பி.சி நிகழ்ச்சி ஒன்றில் மனம் திறந்து பேசியிருந்தார் சன்னி லியோன்


உள்ளே வந்தது எப்படி?


“என் இளைய வயதில் நான் என் உடல் குறித்து மிகுந்த தாழ்வு மனப்பான்மைக் கொண்டவளாக இருந்திருக்கிறேன். நான் மிகவும் பருமனாக இருந்தது என்னை மிகவும் தொந்தரவு செய்த ஒரு விஷயம். நீங்கள் நன்றாக வளர்க்கப்பட்ட ஒரு  குடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம அல்லது மோசமான ஒரு குடும்பச் சூழலில் இருந்து வந்தவராக இருக்கலாம்.


ஆனால் தன்னைப் பற்றி மிகவும் குறைவான சுயமதிப்பீட்டை கொண்டவராக இருக்கிறார் என்றால், அவர் எந்த மாதிரியான குடும்பத்தில் இருந்து வருகிறார் என்பது அவசியமற்றதாகி விடுகிறது. நான் என்னை அழகானவளாகவோ ஆண்களை ஈர்க்கக் கூடியவராகவோ எப்போதும் உணர்ந்ததில்லை. ஆனால் என் கல்லூரி முதலாமாண்டில்  திடீரெண்டு என் உடல் எடை குறையத் தொடங்கியது. நான் பலரின் கவனத்தை ஈர்க்கும் ஒருவராக மாறினேன். என் அழகைப் பற்றி நிறையபேர் என்னிடம் கூறினார்கள்.


புதிய அனுபவம்:


அதுவரை எந்த ஒரு ஆணிடம் இருந்தும் பாராட்டுக்களை பெற்றிராத என்னைபோன்ற ஒருவருக்கு இந்த அங்கீகாரம் புதிதான ஒரு அனுபவமாக இருந்தது. அதே நேரத்தில் இந்த அங்கீகாரத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்கிற அழுத்தமும் எனக்குள் உருவாகத் தொடங்கியது.இதன் காரணத்தால் மற்றவர்கள் என்னிடம் என்ன எதிர்பார்க்கிறார்களோ அதையே நான் செய்யவேண்டிய கட்டாயத்திற்கு  தள்ளப்பட்டேன்." இவ்வாறு அவர் பேசினார்.


.மேலும் பாலிவுட் திரைப்படங்களில் நடிக்கத் தொடக்கினார். ஆனால் அவரது கடந்த கால வாழ்க்கை மீதான விமர்சனங்கள் அவரை நோக்கி தொடர்ந்து வைக்கப்பட்டுக்கொண்டுதான் இருந்தன. இதனைப் பற்றி பேசிய சன்னி லியோன், 


"நான் எவ்வளவு முயன்றாலும் இந்த விமர்சனங்கள் என்னை விட்டு போகப்போவதில்லை. இந்த விமர்சனங்களை கண்டு நான் பயப்படவில்லை. என் வாழ்க்கையில் எல்லா முடிவுகளையும் நான் சொந்தமாக சிந்தித்து எடுத்திருக்கிறேன். அவற்றுக்காக நான் யாரிடமும் தலைகுணியப் போவதில்லை வெட்கப்படப் போவதில்லை. நான் என் மனசாட்சிக்கு உண்மையாக இருந்தேனா இல்லையா என்பது மட்டுமே எனக்கு முக்கியம்." இவ்வாறு அவர் கூறினார்.