தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகர் வருண் தேஜுடன் அறிமுகமானவர் நடிகை திஷா பத்தானி. தொடர்ந்து இந்தியில் சுஷாந்த் சிங் ராஜ்புத்துடன் ’தோனி த அன்டோல்ட் ஸ்டோரி’ பட்ம், ஜாக்கி சான் உடன் ’குங் ஃபூ யோகா’ ஆகிய படங்களில் நடித்து பெரும் பிரபலமானார்.


தொடர்ந்து பாலிவுட்டில் வெற்றிப் படங்களில் நடித்து வரும் திஷா பத்தானி, திரைப்படங்கள் தாண்டி தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்லோட் செய்யும் நீச்சல் உடை புகைப்படங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ளார்.


 






தற்போது தனக்கென பாலிவுட்டில் தனி இடத்தைப் பிடித்து பாலிவுட்டையே கிறங்கடித்து வருகிறார் திஷா பத்தானி. ஆனால், திஷா கவர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து கதையம்சம் இல்லாத படங்களில் நடித்து வருவதாக தொடர்ந்து அவர் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.


இந்நிலையில், பாலிவுட்டின் ஹிட் படங்களில் ஒன்றான ’ஏக் வில்லன்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் தற்போது நடித்து வரும் திஷா பத்தானி, முன்னதாக இப்படத்தின் புரோமோஷன் விழா ஒன்றில் கலந்து கொண்ட போது பெரும் விமர்சனத்துக்கும் கேலிக்கும் ஆளாகியுள்ளார்.


 






”தான் அறிமுகமானபோது, தோனி படத்தில் இருந்த க்யூட்டான திஷா இவர் இல்லை, பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தன் முகத்தையே கெடுத்துக் கொண்டார்” என இவரது ரசிகர்கள் இந்த வீடியோவின் கமெண்ட் செக்‌ஷனில் பொங்கி வருகின்றனர். மேலும்,மூக்கு, உதடுகள் என அனைத்தையும் திஷா மாற்றி விட்டார் என வருத்தம் தெரிவித்தும் வருகின்றனர்.


எனினும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்வதும் செய்யாததும் அவரது தனிப்பட்ட உரிமை, பாடிஷேமிங் எந்த விதத்திலும் ஏறக முடியாதது. திஷா அழகாக உள்ளார் என அவரது ரசிகர்கள் மற்றொரு புறம் அவருக்கு ஆதரவாகக் களமாடி வருகின்றனர்.


திஷா பத்தானி பிரப பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃபின் மகன் டைகர் ஷெராஃபுடன் தொடர்ந்து சில படங்களில் பணியாற்றியுள்ள நிலையில், அவர் டைகர் ஹெராஃபை டேட் செய்வதாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.