சமீபத்திய தமிழ் சீரியல் உலகில் மக்களைக் கவரும் விதமான சீரியல்களைக் கொடுத்து ரேட்டிங்கில் முன்னணியில் இருக்கும் சேனல்களில் ஒன்று ஜீ தமிழ்.
ஸ்டார் விஜய், சன் தொலைக்காட்சி சீரியல்களுடன் போட்டி போட்டு மக்களைக் கவரும் விதமான சீரியல்களை வழங்கி வரும் ஜீ தமிழ், ’அமுதாவும் அன்னலட்சுமியும்’ என்ற புது சீரியல் ஒன்றை விரைவில் ஒளிபரப்ப உள்ளது.
வரும் ஜூலை 4ஆம் தேதி முதல் இந்த சீரியல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள நிலையில், ’கருத்தம்மா’ புகழ் நடிகை ராஜஸ்ரீ இந்த சீரியலில் நடிக்கிறார். முன்னதாக இவர் சன் டிவியின் பிரபல சீரியலான ’சித்தி 2’ வில் நடித்திருந்தார்.
தன் மகன் பள்ளி ஆசிரியர் என நினைத்திருக்கும் அம்மா, ஆனால் அதற்கு மாறாக அவருக்குத் தெரியாமல் பள்ளியில் பியூன் வேலை செய்யும் மகன், பள்ளி ஆசிரியரைதான் வாழ்வில் திருமணம் செய்ய வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் ஹீரோயின் என இந்த சீரியலின் கதை ட்ரெய்லரிலேயே கூறப்பட்டு, தமிழ் சீரியல் ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது.
இந்நிலையில் இந்த சீரியலை பிரமோட் செய்யும் வகையில் நடிகைகள் சினேகா, சரண்யா, சங்கீதா மூவரும் இதுகுறித்து பேசிய ப்ரமோ ஒன்றை ஜீ தமிழ் முன்னதாக வெளியிட்டுள்ளது.
இந்தப் புதிய சீரியல் வார நாள்களான திங்கள் - சனி இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.