முகப்புபொழுதுபோக்குDeepika Padukone : நடிப்பால் மிரள வைப்பவர்.. உலகளவில் கோலோச்சும் தீபிகா படுகோன் பிறந்தநாள் இன்று
Deepika Padukone : நடிப்பால் மிரள வைப்பவர்.. உலகளவில் கோலோச்சும் தீபிகா படுகோன் பிறந்தநாள் இன்று
HBD Deepika Padukone : கடந்த பத்து ஆண்டுகளில் தனது முத்திரையை பாலிவுட் சினிமாவில் ஆழமாக பதித்த நடிகை தீபிகா படுகோன் பிஸியான ஒருவராகவும் அதிகம் சம்பளம் வாங்கும் ஒரு நடிகையாகவும் இருந்து வருகிறார்.
பேட்மிட்டன் வீரர் பிரகாஷ் படுகோனின் மகளான தீபிகா படுகோன் முதலில் ஒரு பேட்மிட்டன் வீராங்கனையாக பல போட்டிகளில் கலந்து கொண்டு தனது திறமைகளை நிரூபித்து வந்தார். இருப்பினும் தனக்கு மாடலிங் மீதிருந்த அதிகப்படியான ஆர்வத்தால் கல்லூரியில் படித்து கொண்டு இருக்கும்போதே மாடலிங் செய்து வந்தார். அதன் மூலம் 2006ம் ஆண்டு அவருக்கு 'ஐஸ்வர்யா' என்ற கன்னட திரைப்படம் ஒன்றில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதற்கு பிறகு பாலிவுட்டில் கிடைத்த வாய்ப்பை மிக சரியாக பயன்படுத்திக்கொண்டு இன்று உலக அளவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக கொண்டாடப்பட்டு வருகிறார்
கடந்த பத்து ஆண்டுகளில் தனது முத்திரையை பாலிவுட் சினிமாவில் ஆழமாக பதித்த நடிகை தீபிகா படுகோன் பிஸியான நடிகைகளில் ஒருவராகவும் இந்திய திரையுலகில் அதிகம் சம்பளம் வாங்கும் ஒரு நடிகையாகவும் இருந்து வருகிறார். மிகவும் துணிச்சலான, பக்குவப்பட்ட பெண்மணியாக உலகளவில் கோலோச்சும் நடிகையாக இருக்கும் தீபிகா படுகோன் இன்று தனது 38வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
தீபிகா படுகோன் - ஷாருக்கான் காம்போ :
2007ம் ஆண்டு ஃபரா இயக்கத்தில் வெளியான 'ஓம் சாந்தி ஓம்' திரைப்படம் மூலம் திரை துறையில் அறிமுகமானவர் நடிகை தீபிகா படுகோன். ஷாருக்கான் ஜோடியாக முதல் படத்தில் இணைந்த தீபிகா படுகோனுக்கு அப்படம் நல்ல ஓர் வரவேற்பை பெற்று தந்தது. அப்படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதை தட்டிச்சென்றார். ஷாருக்கான் - தீபிகா படுகோன் ஜோடி இருவரும் இணைந்து சென்னை எக்ஸ்பிரஸ், ஹாப்பி நியூ இயர், பதான், ஜவான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர்கள் காம்போ பாலிவுட் ரசிகர்களின் ஃபேவரட் என்றே சொல்ல வேண்டும்.
முக்கியமான மைல்கல் :
ரன்பீர் கபூருடன் இணைந்து யே ஜவானி ஹை தீவானி , தமாஷா உள்ளிட்ட திரைப்படங்கள் மாபெரும் வெற்றி படங்களாக அமைந்தன. 2018ம் பிரபலமான திரைப்பட தயாரிப்பாளர் சஞ்சய் லீலா பன்சாலியின் 'பத்மாவத்' திரைப்படத்தில் ராணி பத்மாவதியாக, தீபிகா படுகோன் நடித்தது அவரது திரைப்பயணத்தில் மிக முக்கியமான ஒரு மைல் கல்லாக அமைந்தது.
திருமண வாழ்க்கை :
2018ம் ஆண்டு பாலிவுட் ஸ்டார் ஹீரோ ரன்வீர் கபூர் தீபிகா படுகோன் திருமணம் நடைபெற்றது. பாலிவுட்டின் மிகவும் க்யூட்டான நட்சத்திர ஜோடிகளாக இவர்கள் இருவரும் வலம் வருகிறார்கள்.
2024ல் நடிகர் ஹிருத்திக் ரோஷனின் ஃபைட்டர், பிரபாஸின் கல்கி 2898 AD மற்றும் சிங்கம் அகெய்ன் என அடுத்தடுத்து பெரிய பட்ஜெட் படத்தில் நடித்து வருகிறார்.
பர்த்டே ஸ்பெஷல் :
தீபிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் பிரபாஸ் ஜோடியாக நடித்து வரும் கல்கி 2898 AD படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. அறிவியல் ரீதியிலான காவிய கதைக்களத்துடன் உருவாக்கப்பட்டுள்ள கல்கி திரைப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார். அமிதாப்பச்சன், திஷா பதானி, கமல்ஹாசன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
மிகவும் கோபமாக இருப்பது போல போஸ்டரில் தோற்றமளிக்கிறார் தீபிகா படுகோன். இந்த போஸ்டர் தீபிகா படுகோன் ரசிகர்களுக்கு மிகப்பெரிய பிறந்தநாள் ட்ரீட்டாக அமைந்துள்ளது.