நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தை கிண்டல் செய்து திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை பதிவிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 


 நடிகர் ரஜினிகாந்த்   சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்துடன் 4வது முறையாக இணைந்துள்ள படம் “ஜெயிலர்”. நெல்சன் திலீப்குமாரின் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் நேற்று உலகமெங்கும் வெளியானது.  ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சரவணன், யோகிபாபு, தமன்னா, சிவராஜ் குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப், விநாயகம், வசந்த் ரவி, மிர்னா உள்ளிட்ட பலரும் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகியுள்ளது. 


2 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி படம் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் குடும்பம்,குடும்பமாக தியேட்டருக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். படத்தின் முதல் நாள் வசூல் நிலவரமும் வெளியாகியுள்ளது. அதன்படி முதல் நாளில் கிட்டதட்ட ரூ.49 -52 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டும் கிட்டதட்ட 900 ஸ்கிரீனில் ஜெயிலர் படம் வெளியாகியுள்ளது. அதேபோல் கேரளாவில் 400, கன்னடத்தில் 1093 ஸ்கிரீனிலும் ஜெயிலர் படம் திரையிடப்பட்டுள்ளது.






திரையிட்ட இடமெல்லாம் திருவிழா என்பது போல அமர்க்களமாக ஜெயிலர் படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. படத்தின் விமர்சனமும் பாசிட்டிவ் ஆக உள்ளதால் வயது வித்தியாசமில்லாமல் படம் பார்த்து வருகின்றனர். கிட்டதட்ட ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை பெரும்பாலான தியேட்டர்கள் ஹவுஸ்புஃல் நிலையை இப்போதே எட்டி விட்டது. இந்த மாதம் முழுக்க ஜெயிலர் படத்தின் தாக்கம் இருக்கும் என திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படியான நிலையில் சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 


அதில் ரசிகர் ஒருவர் ஜெயிலர் படம் பார்த்துவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார். அந்த ரசிகர் சமூக வலைத்தளங்களில் நன்கு பரீட்சையமானவர். ரஜினிக்கு ஆஸ்கர் அவார்ட் கொடுக்க வேண்டும் என அண்ணாத்த படம் வெளியான போது சொல்லி இணையத்தில் வைரலானார். அவர் இந்த முறை ஜெயிலர் படம் பார்த்து விட்டு தனது கருத்துகளை தெரிவித்துள்ளார். 


அப்போது, “நட்சத்திர எண்ண முடியாது, என் தலைவனை வெல்ல முடியாது. அமெரிக்க அதிபர் பைடன் ஜெயிலர் படம் பார்க்க ரோகிணி தியேட்டர் வர்றாரு.. இது ஒரு படம் இல்ல மக்களுக்கு ஒரு பாடம். கருநாகத்தை கொஞ்சாதே..சூப்பர் ஸ்டாரை மிஞ்சாதே.. LIC ஹைட்டு. தலைவன்தான்  வெயிட்டு..