திரைப்படங்களை மாறுபட்ட கோணத்தில் விமர்சனம் செய்து புகழ்பெற்றவர் ப்ளூ சட்டை மாறன். இவர் தற்போது இயக்குநராக அவர்தாரம் எடுத்துள்ளார். படங்கள் குறித்து தனக்கே உரிய பாணியில் நக்கலடித்து  விமர்சனம் செய்து வந்த ப்ளூ சட்டை மாறன் படத்தை இயக்க போகிறார் என்றதுமே எதிர்பார்ப்பு எகிறிபோனது , அதற்கு ஏற்ற மாதிரி படத்திற்கு ‘ஆண்டி இந்தியன்’ என பெயர் வைத்திருக்கிறார். இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியானது அதில்  பிரபலமான ஒரு நபர் (அவர்தான் ப்ளூ சட்டை மாறன் ) இறந்து போகவே, அவரை இந்து முறைப்படி அடக்கம் செய்வதா, இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்வதா அல்லது கிருத்துவ முறைப்படி அடக்கம் செய்வதா என போட்டி நடக்கிறது. இறுதியில் எந்த முறைப்படி அடக்கம் செய்தார்கள் என்பதுதான் படத்தின் கதை . படத்தை இயக்கியது மட்டுமல்லாமல் படத்தில் ப்ளூ சட்டை மாறனும் நடித்துள்ளார் என அறிவிக்கப்பட்ட நிலையில், மாறன் ஒரு இடத்திலும் டிரைலரின் தோன்றவில்லை என்பது நெட்டிசன்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக அமைந்துவிட்டது. 






டிரைலர் வெளியீட்டை முன்னிட்டு தனது சொந்த கண்ணீர் அஞ்சலி புகைப்படத்திற்கே மாலையிட்டு புரமோஷன் வேலையில் ஈடுபட்டார் ப்ளூ சட்டை மாறன். ஆண்டி இந்தியன் படத்தில் மாறன் , பாஷா என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது அவர் வெளியிட்ட கண்ணீர் அஞ்சலி புகைப்படம் மூலம் தெரிகிறது. ராதாரவி , ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் மத அரசியலை மையப்படுத்தி உருவாகி  இருப்பதாக மாறன் தெரிவித்திருந்தார் .


 










முன்னதாக  ஆண்டி இந்தியன் திரைப்படம் சென்சார் அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டது. பின்னர் நீதிமன்றத்தை நாடிய மாறன் மற்றும் தயாரிப்பு  தரப்பு ,அங்கு அனுமதி பெற்று மீண்டும் சென்சார் செய்யப்பட்டு வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது. விரைவில் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படவுள்ளது. படம் திரைக்கு வந்த  பின்னர் , ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா என்பதை பார்க்கலாம்.