திருப்பூர் பொங்கலூர் பகுதியில் வைகாசி பட்டத்தில் நடவு செய்த தக்காளி அறுவடை செய்யப்பட்டு வருகிறது. மழையின் காரணமாக தக்காளி அழுகி வரத்து குறைந்து விலை உயர்வு ஏற்படும் என்று விவசாயிகள் கருதினர். விலை உயர்வை எதிர்பார்த்து விவசாயிகள் சாகுபடி செய்திருந்தனர். சில மாதங்களாக வெளியூர் வரத்து அதிகமாக இருந்ததால் விலை சரிவு ஏற்பட்டது. 12 கிலோ தக்காளி ரூ.120க்கு விற்பனையானது. உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கடும் நெருக்கடிக்கு ஆளாகினர். கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் செடியில் உள்ள தக்காளி அழுக தொடங்கியுள்ளது. வெளியூர் வரத்தும் குறைந்துள்ளது. இதனால் தக்காளி விலை பல மடங்காக அதிகரித்துள்ளது. சென்ற மாதம் முழுவதும் காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வந்ததால் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர். காய்கறி வாங்குவதற்கே பெரிய அளவில் செலவு செய்ய வேண்டியதாக இருந்தது. இந்த மாதமும் விலையேற்றம் நீடிக்கிறது. கடந்த நான்கு நாட்களாகவே மழை பெய்து வருவதால் காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. தற்போது மழை மற்றும் வெளியூர் வரத்து குறைந்ததால் நாட்டுத்தக்காளியின் கொள்முதல் விலை உயர்ந்ததில் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



கொரோனா தொற்று பிரச்னையால் ஒன்றரை ஆண்டுகளாக தக்காளி விலை கடும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. பல நேரங்களில் பழங்கள் அறுவடை கூலிக்கும் கட்டுப்படியாத நிலையும் இருந்தது.அய்யலுார் மண்டிகளில் இரு வாரங்களுக்கு முன்னர் 15 கிலோ பெட்டி ரூ.70 முதல் 120 வரை ஏலம் போனது. சில்லரை விற்பனையில் கிலோ ரூ.10 மற்றும் அதற்குக் குறைவாகவும் விற்றது. தற்போது பரவலாக அனைத்து பகுதியிலும் மழை பெய்வதால் தக்காளி வரத்து குறைந்து உள்ளது. அய்யலுார் மண்டிகளுக்கு சொற்ப அளவில் கொண்டு வரப்படும் உள்ளூர் தக்காளிகளுக்கு மவுசு கூடி விலை அதிகரித்துள்ளது. நான்கு நாட்கள் முந்தைய நிலவரப்படி பெட்டிக்கு ரூ.200 முதல் 250 வரை கொள்முதல் விலை கிடைத்தது. இதனால் சில்லரை விற்பனையில் கிலோ ரூ.25 முதல் 30 வரை விற்றுவந்தது. 



இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக பெய்த கன மழை காரணமாக தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதனால், தக்காளி விலையும் அதிகரித்துள்ளது. தற்போது தினமும் அறுபது சதவீதம் குறைவான தக்காளி பெட்டிகள் மட்டுமே வருகின்றன. இதனால் தக்காளி விலை கிடுகிடுவென உயா்ந்துள்ளது. நேற்று பெட்டி 450 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை விற்பனை ஆகிறது. அதனால் சிலரை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ. 45 முதல் ரூ. 50 க்கு விற்கப்பட்டது. தக்காளி விலை உயா்வால் மக்கள் கடும் அதிா்ச்சி அடைந்துள்ளனா். இன்னும் சில நாள்களுக்கு இதே நிலைதான் நீடிக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனா்.