நெல்லை மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த பள்ளி மாணவன் சின்னத்துரை மற்றும் அவரது சகோதரி சந்திராசெல்வியை அரிவாளால் வெட்டிய கொடூரத்தைக் கண்டித்து நடிகர் , இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார். சமூக வலைதளத்தில் தொடர்ந்து பிரபலங்களை விமர்சித்து வரும் திரைப்பட ஆர்வளரான ப்ளூ சட்டை மாறன் ஜீ.வி பிரகாஷ் குமாரை பாராட்டியுள்ளார்.
நெல்லையில் கொடூரம்
நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவைச் சேர்ந்த கூலி தொழிலாளிகளான முனியாண்டி, அம்பிகாபதி தம்பதியர். அவரது மகன் சின்னத்துரை (17). பன்னிரெண்டாம் வகுப்பும், மகள் சந்திராசெல்வி (14) ஒன்பதாம் வகுப்பும், வள்ளியூரில் உள்ள கண்கார்டியா அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பட்டியல் இன வகுப்பை சேர்ந்த சின்னத்துரைக்கு, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் ஜாதி ரீதியிலான ஒடுக்குமுறைகள் அளித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து சின்னத்துரை கடந்த ஒரு வாரமாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்நிலையில் பள்ளி நிர்வாகம் புதன் கிழமை பெற்றோரிடம் தொடர்பு கொண்டு சின்னத்துரையை பள்ளிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளனர்.
அதனை தொடர்ந்து பள்ளிக்கு சென்ற சின்னத்துரையிடம் ஆசிரியர்கள் விசாரணை நடத்தியுள்ளனர். அதில் பள்ளியில் தன்னை சிலர் அடிப்பதாக நடந்ததை கூறியுள்ளார். பின்னர் சின்னத்துரையிடம் அந்த மாணவர்கள் பள்ளி முடிந்து பின்பு மிரட்டியுள்ளனர். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு சுமார் 10.30 மணிக்கு வீட்டில் இருந்த சின்னத்துரையை ஒரு கும்பல் வீடு புகுந்து அரிவாளால் சரமாரியாக வெட்டியது. அப்போது அங்கு இருந்த சந்திராசெல்வி அதனை தடுத்துள்ளார். அப்போது அவருக்கும் கையில் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இரத்த வெள்ளத்தில் சரிந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் நேற்று மதியம் கிருஷ்ணனின் உடலை நாங்குநேரி வள்ளியூர் மெயின் ரோட்டில் வைத்து குற்றவாளிகளை உடனே கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டதால் ஈடுபட்டனர். இதனையடுத்து அங்கு வந்த நாங்குநேரி தாசில்தார் விஜய் ஆனந்த் மற்றும் போலீஸ் டி.எஸ்.பி. ராஜூ சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி குற்றவாளியை விரைவில் கைது செய்வதாக உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கிருஷ்ணனின் உடலை எடுத்து சென்றனர்.
வீசும் காற்றில் விஷம் பரவட்டும்
இந்த நிகழ்வை கண்டித்து இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் ”சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
தொடர்ச்சியாக சினிமா பிரபலங்களை விமர்சித்து வரும் சினிமா ஆர்வலரான ப்ளு சட்டைமாறன் ஜி.வி யின் இந்தப் பதிவை பாராட்டியுள்ளார். “தமிழ்ப்பட ஹீரோக்களில் எளிய மக்களுக்கு குரல் தருபவர்கள் மிகவும் அரிது அல்லது இல்லவே இல்லை. தனது புகழையும், ரசிகர்களையும் சமூக மேம்பாட்டிற்கு பயன்படும் வண்ணம் முன்னெடுப்பவரே அசல் பிரபலம். அதில் ஒருவர்தான் ஜி.வி. பிரகாஷ். இதே நிலைப்பாட்டை எந்த சமரசத்திற்கும் ஆட்படாமல்.. தன் காலமுள்ளவரை எடுக்க வேண்டும். மற்றதெல்லாம் படத்தில் மட்டும் ஏழைகளுக்காக பஞ்ச் பேசி, நிஜத்தில் அட்டகத்திகளாக இருப்பவை. வேஸ்ட் “ என்று அவர் கூறியிருக்கிறார்.