Lal Salaam Rajini: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் திரைக்கு வந்து ரசிகர்கள் கொண்டாடி வரும் படம் லால் சலாம். 3, வை ராஜா வை உள்ளிட்ட படங்களை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி இருக்கும் படம் லால் சலாம். கிரிக்கெட் சார்ந்த உண்மை கதை என்பதாலும், படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடிக்கிறார் என்பதாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது.
லால் சலாம்:
இது தவிர படத்தில் முக்கிய கேரக்டர்களில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால், நிரோஷா, தம்பி ராமையா, செந்தில் உள்ளிட்டோர் நடித்து அதகளப்படுத்தியுள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள லால் சலாம் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் இன்று முதல் திரைக்கு லால் சலாம் வந்துள்ளது. படத்தை பார்த்த ரசிகர்களின் கூஸ்பம்ப் ஏற்படுத்தும் ரஜினியின் நடிப்பை பார்த்து கொண்டாடி வருகின்றனர்.
ரஜினியின் மாஸ் என்ட்ரி முதல் மொய்தீன் பாயாக வந்து மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் கேரக்டரில் சிறப்பாக நடித்துள்ளதாக ரஜினியை ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். அதேநேரம், படத்துக்கு தேவையானது கச்சிதமாக கொடுத்து இயக்குநர் என்ற பொறுப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஸ்கோர் செய்துள்ளதாகவும், படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நடிப்பு பேசப்படும் வகையில் இருப்பதாகவும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இதற்கெல்லாம் மேலாக, படத்திற்கு மேலும் பலம் சேர்ந்த்துள்ளது இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் பின்னணி இசை.
யாருக்கு அதிக சம்பளம்?
இந்த நிலையில் இன்று லால் சலாம் படம் ரிலீசான நிலையில் ஊடகத்திற்கு படத்தின் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேட்டியளித்துள்ளார். அதில், லால் சலாம் படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு அதிக சம்பளமா அல்லது படத்தின் இயக்குநரான உங்களுக்கு அதிக சம்பளமா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ”அதிக சம்பளம் என்பதை எதை கற்று கொள்கிறோம் என்பதை பொறுத்து இருக்கு. அப்படி பார்க்கும்போது லால் சலாம் படத்தின் மூலம் அதிகமாக அதிகமாக கற்றுக் கொண்டது நான் தான். ஆனால், சம்பளத்தில் அதிகம் பெற்றது சூப்பர் ஸ்டார் தான்” என கூறியுள்ளார்.
மேலும் படிக்க: Lal Salaam Review: ரஜினிகாந்தின் மாஸ் கேமியோ! ஐஸ்வர்யா இயக்கம் எப்படி? “லால் சலாம்” திரைப்பட விமர்சனம்!