90 ஸ் கிட்ஸ்களிடம் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்று தான் கனா காணும் காலங்கள். பள்ளி பருவ வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட சீரியலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக இதில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்த லிங்கேஸ்வரன் அனைவரிடத்திலும் தற்போது பாண்டியாகவே வலம் வருகிறார். இதனையடுத்து இந்த சீரியலில் நடித்த பிரபலங்களுக்கு சினிமாத்துறையிலும் வாய்ப்பு கிடைத்தது. இதனால் அவர்களின் வாழ்க்கை நல்ல முன்னேற்றம் கண்டது என்று தான் கூற வேண்டும். இப்படி சீரியல் மற்றும் சிறிய கதாபாத்திரத்தின் மூலம் மக்களிடம் மிகவும் பிரபலமானவர் தான பாண்டி. பல படங்களில் காமெடி ரோலில் நடித்த இவர் பொது வாழ்விலும் பல்வேறு உதவிகளை செய்துவருவது மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் தன்னுடைய வாழ்வில் என்னென்ன பிரச்சனைகளை சந்தித்தார்? எப்படியெல்லாம் வாழ்வில் முன்னேற்றினார் என்பது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் வாயிலாகத் தெரிவித்துள்ளார்.
அதில், தற்போது சமீபத்தில் திரைத்துறைக்கு வந்து ஹிட்டான நடிர்களில் யோகிபாபும் ஒருவர். இதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ஆனால் என்னுடைய அம்மாவிற்கு மிகவும் வருத்தம் என தெரிவித்துள்ளார். மேலும்“ என்னோட அம்மா.. ஏன் நீ மட்டும் இதே நிலைமையில இருக்கிற“ என்ன காரணம்? எப்போது முன்னேறுவாய் என கேட்டு வருத்தப்படுவார்கள். ஆனால் தன் வாழ்வில் மிகப்பெரிய கஷ்டத்தை சந்தித்து தான் யோகிபாபும் முன்னேறியுள்ளார். எனவே என்றாவது ஒரு நாள் நானும் என் வாழ்வில் முன்னேறிவிடுவேன் என நம்பிக்கை உள்ளதாகவும், கலைத்துறை எப்போது வேண்டுமானாலும் என்னை மேலே கொண்டு செல்லும் என்ற நம்பிக்கையுடன் பயணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் என்னோட வாழ்வில் துள்ளுவதோ இளமை படத்தில் தனுசுடன் நடிக்காது இதுவரை வருத்தமளிப்பதாகவும் கூறியுள்ளார். ஆனால் தெய்வத்திருமகள், சாட்டை போன்ற படங்கள் தனக்கு நல்ல வரவேற்பைக் கொடுத்தாகவும் பகிர்ந்துள்ளார்.
இதோடு சினிமாத்துறையில் முன்னேற வேண்டும் என்று நினைப்பவர்களுக்காக, gain for success என்ற வாட்ஸ் அப் குரூப் ஒன்றை வைத்துள்ளதாகவும், சினிமாத்துறையில் சேர வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு உதவுவதாகவும் கூறியுள்ளார். மேலும் முன்பு போன்று இயக்குனர் அலுவலகங்கள் எதுவும் யாருக்கும் வெளியே தெரிவதில்லை என்ற குற்றச்சாட்டையும் முன்வைக்கிறார்.
நண்பர்களின் புறக்கணிப்பு:
கனா காணும் காலங்களில் கிடைத்த நட்பு எனக்கு இன்றும் தொடர்கிறது. ஒவ்வொருவரும் திறமையின் மூலம் ஏதாவதொரு துறையில் முன்னேறியுள்ளனர். சில சமயங்களில் அவர்கள் நடித்த படத்தில் ஏதாவது மாற்றிக்கொள் என்று சொன்னால் கூட ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இல்லை. குறிப்பாக பல முறை இப்ரானிடம் போன் செய்து சில விஷயங்களை மாற்றிக்கொள் என்று சொன்னால் கூட ஏற்றுக்கொள்ளும் நிலை இல்லை எனவும் தன்னைப்புறக்கணிப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும் அஞ்சலியும், நானும் அங்காடித்தெரு படத்திற்கு முன்னதாகவே நல்ல நண்பர்கள். ஆனால் திரைத்துறையில் முன்னேறிய பிறகு கண்டுக்கொள்ளவில்லை. போன் செய்தாலும் அவரது மேனேஜர் தான் பதில் அளிப்பார். ஒருமுறை மலேசியா சென்ற போது அவரின் மொபைல் எண்கொடுத்தார். ஆனால் அப்போதும் தன்னுடைய அழைப்பை ஏற்கவில்லை. இதுப்போல் சினிமாத்துறையில் நல்ல நிலைக்கு வந்துவிட்ட பின்னர், தங்களை கண்டுக்கொள்ளவில்லை என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். இத்தனை ஆண்டுகளில் பல நண்பர்கள் இருக்கிறார்கள் என தெரிவிக்கும் அவர், தாங்கிப்பிடிப்பவர்கள் மட்டுமில்லை நல்ல இரு என்று வாழ்த்துபவர்களும் நண்பர்கள் தான் என மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
சொந்த வாழ்க்கை:
காதல் திருமணம் செய்துக்கொண்ட எனக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறார் என தெரிவித்துள்ளார். மேலும் சிறுவயதில் நாங்கள் ஒரு நாள் சாப்பிட்டிற்கே கஷ்டப்பட்டோம். எனவே இதுப்போன்று உள்ளவர்களுக்கு உதவும் வகையில் உதவும் மனிதன் என்ற அறக்கட்டளையை அமைத்து உதவி செய்துவருவதாகவும் பாண்டி தெரிவித்துள்ளார் . தன்னுடைய வருமானத்தில் 10 சதவீதத்தை இதற்காகப் பயன்படுத்துவதாகவும் கூறியுள்ளார்.