விஜய் தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளர் பிரியங்கா. இவரது பேச்சுக்கும், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும்போது இவர் செய்யும் ரகளைகளுக்கு என்றும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர்பிக்பாஸ் சீசன் 5-ல் பங்கேற்றபோது இவரது புகழ் மேலும் அதிகரித்தது. அந்த நிகழ்ச்சியில் அவர் 2ம் இடத்தை பிடித்து அசத்தினார்.




பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவரை சமூக வலைதளங்களில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், பிரியங்காவின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 96 படத்தில் வரும் நடிகை திரிஷாவின் ஜானு கெட்டப்பில் பிரியங்கா திரிஷாவைப் போலவே மஞ்சள் நிற சுடிதார், படத்தில் வருவது போன்ற துப்பட்டா, சிகை அலங்காரத்துடன் போஸ் கொடுத்துள்ளார். இந்த படத்தில் அவர் அச்சு அசலாக திரிஷாவைப் போலவே உள்ளார்.






இதைக்கண்ட பலரும் இந்த புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர். பிரியங்கா ரசிகர்கள் இந்த போட்டாவை அவரவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து பிரியங்காவை வாழ்த்தி கமெண்ட் செய்து வருகின்றனர். தற்போது ஸ்டார் மியூசிக் நிகழ்ச்சியில் பங்கேற்று வரும் பிரியங்கா, அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இந்த கெட்டப்பில் வந்துள்ளாரா? என்றும் ரசிகர்கள் யோசித்து வருகின்றனர்.




பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் சூழலில், இந்த நிகழ்ச்சிக்கு வைல்ட் கார்ட் ரவுண்டில் ஓவியா வரவில்லை என்பது உறுதியாகிவிட்டது. இதனால், அவருக்கு பதிலாக பிரியங்காவை பிக்பாஸ் அல்டிமேட்டிற்குள் வரச்சொல்லி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிட்பில் வீடியோக்களை காண