நல்ல நேரம் :
காலை 6.30 மணி முதல் காலை 7.30 மணி வரை
மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை
கௌரி நல்ல நேரம் :
காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை
மாலை 7.30 மணி முதல் மாலை 8.30 மணி வரை
இராகு :
காலை 7.30 மணி முதல் காலை 9 மணி வரை
குளிகை :
மதியம் 1.30 மணி முதல் மதியம் 3 மணி வரை
எமகண்டம் :
காலை 10.30 மணி முதல் மதியம் 12 மணி வரை
சூலம் – கிழக்கு
மேஷம் :
மேஷ ராசிக்காரர்களே இந்த நாள் நீங்கள் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். சிறிய விஷயங்களுக்கு கூட தேவையில்லாத கோபம் உண்டாகும். நண்பர்கள், சுற்றத்தாரிடம் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். மன அமைதிக்கு ஆலய வழிபாடு சிறந்தது.
ரிஷபம் :
ரிஷப ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு நன்மை பயக்கும் நாளாக அமையும். மனதில் புது தன்னம்பிக்கை பிறக்கும். புதிய நட்பு கிடைக்கும். ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்டுவீர்கள்.
மிதுனம் :
மிதுன ராசிக்காரர்களே இந்த நாள் நீங்கள் நல்ல காரியங்களில் ஈடுபடுவீர்கள். இதனால், மன நிறைவும், அமைதியும் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். பிள்ளைகளின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றுவீர்கள்.
கடகம் :
கடக ராசிக்காரர்களே இந்த நாள் நீங்கள் மன உறுதியுடன் காணப்படுவீர்கள். பெற்றோர்கள் – பிள்ளைகள் இடையே அன்பு அதிகரிக்கும். தொழிலில் நீடித்து வந்த போட்டியில் உங்களுக்கு சாதகமான நடவடிக்கைகள் நிகழும்.
சிம்மம் :
சிம்ம ராசிக்காரர்களே இந்த நாள் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். அடுத்தவர் விவகாரங்களில் வீணாக தலையிடக்கூடாது. முக்கிய விவகாரங்களில் முடிவுகள் எடுப்பதில் தள்ளி வைப்பது நல்லது. நவகிரகங்களுக்கு விளக்கு ஏற்றுவது சிறப்பு.
கன்னி :
கன்னி ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு பணவரவும், தனவரவும் கிடைக்கும். நீண்டநாள் வசூலாகாமல் இருந்த கடன்தொகை வசூலாகும். சொத்து விவகாரங்களில் நீடித்து வந்த சிக்கல்கள் தீர்வுக்கு வரும். மனதில் அமைதி ஏற்படும்.
துலாம் :
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த நாள் மனதில் சற்று இனம்புரியாத பயம் உண்டாகும். சிவபெருமானை வழிபட்டு மன அமைதியை பெறலாம். பணிபுரியும் இடங்கள். சுற்றத்தாரிடம் சுமூகமாக செல்வதன் மூலமாக தேவையில்லாத சிக்கல்களை தவிர்க்கலாம்.
விருச்சிகம் :
விருச்சிக ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு இன்பமான நாளாக அமையும். மனதில் புது உற்சாகம் பிறக்கும். கேளிக்கையும், வேடிக்கையுமாக இந்த நாள் மகிழ்ச்சியாக அமையும். அம்மா – மகள் இடையே நீடித்து வந்த மனக்கசப்பு அகலும்.
தனுசு :
தனுசு ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு சவால் நிறைந்த நாளாக அமையும். தொழிலில் போட்டி ஏற்படும். முக்கிய முடிவுகள் எடுக்கும் முன் நன்றாக சிந்தித்து செயல்பட வேண்டும். பெரியவர்களின் அறிவுரைகளை கேட்டு நடப்பது நல்லது.
மகரம் :
மகர ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு பெருமையான நாளாக அமையும். கர்ப்பிணி பெண்கள் மனதில் கூடுதல் சந்தோஷம் கிட்டும். கணவன் – மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். அக்கம்பக்கத்தினர் மத்தியில் உங்கள் மதிப்பு அதிகரிக்கம். துர்க்கை அம்மனை வழிபட வேண்டும்.
கும்பம் :
கும்ப ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு சற்று மந்தமாக அமையும். மனதில் தேவையில்லாத குழப்பங்கள், அச்சங்கள் உண்டாகும். குடும்பத்தினரிடம் அமைதியாகவும், பொறுமையாகவும் நடந்து கொள்ள வேண்டும். சிவபெருமானை வழிபட்டால் மனதில் அமைதி ஏற்படும்.
மீனம் :
மீன ராசிக்காரர்களே நீங்கள் இந்த நாள் உங்கள் பேச்சில் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். யாரிடமும் வீண் வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடாது. அது தேவையில்லாத சிக்கலை ஏற்படுத்தும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.