ஆர். ஜே. பாலாஜி இயக்கத்தில் அடுத்ததாக வெளியாக இருக்கும் திரைப்படம் வீட்ல விஷேசம். இந்தியில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான ‘பதாய் ஹோ’ படத்தின் ரீமேக்தான் இந்தப்படம். போனி கபூர் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்தப்படத்தில் ஆர்.ஜே. பாலாஜியுடன் நடிகர் சத்யாராஜ், நடிகை ஊர்வசி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஹிந்தியில் 29 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, 220 கோடி வரை வசுல் செய்தது இந்தப்படம். இந்தப்படத்தின் தமிழ் ரீமேக்கான வீட்ல விசேசம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரானது அண்மையில் வெளியிடப்பட்டது. அத்துடன் படம் வரும் ஜூன் 17 ஆம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் இந்தப் போஸ்டருக்கு கருத்து தெரிவித்த நெட்டிசன் ஒருவர், “ இது சர்ச்சைக்குரிய கதையாச்சே. இது தமிழ் நாட்டில் எப்படி ரீச் ஆகுமோ என்று பதிவிட்டார். இதற்கு ரிப்ளை கொடுத்த ஆர்.ஜே.பாலாஜி, “ ஆமா !!! குடும்பத்துல ஒருத்தங்க கர்ப்பம் ஆன மாறி படம் எடுத்தா, அது சர்ச்சைக்குரிய ஸ்டோரியா.. ஆனா ஹீரோ, ரெளடி, டான், கொலைகாரன், திருடன், கடத்தல்னு நடிச்சா அது குடும்ப படம்” என்று பதிவிட்டு இருக்கிறார். இந்தப்பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆர்.ஜே.வாக தனது வாழ்கை பயணத்தை தொடங்கி ஆர்.ஜே. பாலாஜி நடிகர், இயக்குனர், கிரிக்கெட் வர்ணனையாளர் என பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தி வருபவர் ஆர்.ஜே.பாலாஜி. ஆர்.ஜே.வாக பணியாற்றி வந்த இவர் விஜய்சேதுபதியின் ‘நானும் ரெளடிதான்’ படத்தில் நடித்ததன் மூலம் கவனம் பெற்றார். தொடர்ந்து எல்.கே.ஜி, மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட படங்களை இயக்கியதோடு அதில் கதாநாயகனாகவும் நடித்தார். இந்தப்படங்கள் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை நிலையில், தற்போது இந்தப்படத்தை இயக்கி இருக்கிறார்.