தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக வலம் வருபவர் வனிதா விஜயக்குமார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பலருக்கும் மீண்டும் பரிட்சையமாகினார். அதன்பின்னர் மீண்டும் தொலைக்காட்சி தொடர்கள், நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் பங்கேற்று வருகிறார். அண்மையில் இவர் தன்னுடைய நண்பர் ஒருவரை சந்திக்க தாய்லாந்து சென்றுள்ளார்.
அங்கு தாய்லாந்து தலைநகர் பாங்காக் நகரிலுள்ள விமான நிலையத்தில் இவர் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக வனிதாவை அதிகாரிகள் காக்க வைத்துள்ளனர். அதன்பின்னர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு வனிதாவை அதிகாரிகள் தாய்லாந்திற்குள் செல்ல அனுமதி வழங்கியுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக வனிதான் விஜய்குமார் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,”இலங்கை ஏர்லைன்ஸ் விமானத்தின் அதிகாரிகளின் செயல் தான் இது. அவர்களுடைய தேவையில்லாத செயலால் நான் தாய்லாந்து விமான நிலையத்தில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக காக்க வைக்கப்பட்டேன். தாய்லாந்து நாட்டில் இந்தியர்களுக்கு வருகைக்கு பிறகு விசா வழங்கப்பட்டு வருகிறது. அதற்கு முன்பாக நாம் தாய்லாந்து பாஸ் மட்டும் எடுக்க வேண்டும். அந்த பாஸ் என்னுடைய மொபைலில் இருந்தது. எனினும் அதனுடைய நகல் எண்ணிடம் இல்லை.
அந்த நகலை கொடுக்க வேண்டும் என்று மூன்று மணிநேரத்திற்கும் மேலாக என்னை காக்க வைத்தனர். நான் இந்தியாவிற்கு சென்று மீண்டும் இந்த பாஸை நகல் எடுத்து கொண்டு வரவேண்டும் என்று கூறினார். நான் தொடர்ந்து போராட்டம் நடத்திய பிறகு என்னை அனுமதித்தனர்” எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க: அழகுத்துறையில் அடுத்த அதிரடி.. Lip Balm நிறுவனம் தொடங்கினார் நயன்தாரா..