பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் நடிகை சாக்‌ஷி. இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக ‘விஸ்வாசம்’, ‘காலா’ உள்ளிட்ட சில படங்களில் தோன்றியிருக்கிறார். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக்கொடுத்தது. சாக்‌ஷி திரைத்துறையில் காலடி  வைப்பதற்கு முன்னதாக மாடலிங் துறையில் கலக்கிக்கொண்டிருந்தவர். பொறியியல் மற்றும் எம்.பி.எ பட்டதாரியான சாக்‌ஷி பெங்களூருவில் மாதம் இரண்டரை லட்சம் ரூபாயில் ,பிரபல ஐடி கம்பெனி ஒன்றில் பணிபுரிந்தாராம். சனி ஞாயிறு என விடுமுறை நாட்களில் மாடலிங் செய்து வந்துள்ளார். தனக்கு சாதரண வேலை செய்வதை விட   சாகசங்கள் நிறைந்த வேலைகளை செய்ய விருப்பம் என்பதாலேயே ஐ.டி வேலையை உதறி தள்ளிவிட்டு  மாடலிங் மற்றும் சினிமா துறைக்கு தாவியதாக நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். சாக்‌ஷி படிப்பில் படு சுட்டியாம், ஐ.ஏ.எஸ் அதிகாரியாக வேண்டும் என்பதே அவரின் சிறு வயது கனவாகவும் இருந்திருக்கிறது. 







சாக்‌ஷி உடல் ஆரோக்கியத்தில் தற்போது அதிக கவனம் செலுத்தி வருகிறார். முகப்பொலிவிற்கு மற்றும் உடல் தோற்றத்தை சரியாக பராமரிப்பதற்கு நடிகைகள் பலர் மருத்துவர்களின் உதவியை நாடும் சூழலில் சாக்‌ஷி யோகா மற்றும் உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவுகளை பின்பற்றி பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.


தனது அன்றாட நிகழ்வுகளை உடனுக்குடன் ஷேர் செய்யும் சாக்‌ஷி  சமூக வலைத்தளங்களில் செம ஆக்டிவ் . இந்நிலையில் பாடி ஷேம் குறித்து வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். நேர்காணல் ஒன்றிற்கு பதிலளித்த அவர். “பாடி ஷேமிங்கை நான் இப்போதும் எதிர்கொண்டுதான் வருகிறேன், நான் மட்டுமல்ல என்னை போன்ற பல பிரபலங்கள், குறிப்பாக நடிகைகளுக்கு இது நடந்துக்கொண்டேதான் இருக்கும். பாடி ஷேமிங் செய்பவர்களின் கருத்துகளை பார்க்கும்பொழுது, உண்மையாகவே அது மாற்றிக்கொள்ளக்கூடியதாக இருந்தால் நான் ஏற்றுக்கொள்வேன், சிலர் விமர்சனம் செய்ய வேண்டும் என்பதற்காகவே கருத்துகளை பதிவிடுவார்கள். அவ்வாறான கருத்துக்களை நான் என்னிடம் நெருங்க விடுவதில்லை ” என தெரிவித்துள்ளார். சாக்‌ஷி பப்ளியான தோற்றத்தில் இருந்து தற்போது உடல் எடையை வெகுவாக குறைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  முன்னதாக தான் உடல் எடை குறித்த விதம் குறித்த தன்னம்பிக்கை பதிவு ஒன்றையும் சாக்‌ஷி ஷேர் செய்திருந்தார். 






சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி  குறித்து கூறிய சாக்‌ஷி   மாடலிங் துறையிலோ, சினிமா துறையிலோ சாதிக்க விரும்புவர்களுக்கு சிறந்த களமாக சமூக வலைத்தளங்கள் இருந்து வருகின்றன என தெரிவித்தார். மேலும் தனது ஆரம்ப காலத்தில் மாடலிங் துறையில் நுழைவதற்கு, புகைப்படங்களை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு அலுவலகமாக ஏறி இறங்கியதாகவும் தற்போது அந்த அவசியம் இல்லை. நமது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் பதிவேற்றி அதையே ஷேர் செய்துக்கொள்ள முடிகிறது. அந்த வகையில் சமூக வலைத்தளங்களின் பங்கு முக்கியமானதாக இருக்கிறது என தெரிவித்துள்ளார். சாக்‌ஷி தற்போது  'ஆயிரம் ஜென்மங்கள்',  'சிண்ட்ரெல்லா' , ‘அரண்மனை 3’, ‘புரவி’ உள்ளிட்ட  சில படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.