பிக்பாஸ் சீசன்5-ன் மூன்றாவது புரோமோ வெளியாகியிருக்கிறது. எல்லாரும் குழுவாக அமர்ந்திருக்கிறார்கள். இமான் அண்ணாச்சி ஜெர்மனி தமிழச்சி மதுமிதாவுக்கு பாட்டு பாட சொல்லி தருகிறார். 'கட்டிக்கற மாமனுக்கு’ அத்தனையும் அத்துப்படி என அவர் ராகம் இழுக்க, கத்திக்கற மாமனுக்கு எல்லாமே அத்துப்படி என கொஞ்சும் தமிழில் திரும்ப பாடுகிறார் மதுமிதா. விடமாட்டேன் உன்ன நானே... உன்ன பிச்சு தின்னு போறேன் நானே என சொல்லிக்கொடுக்கிறார் ராஜூ பாய். உன்ன பிச்சுக்குடு என கொஞ்சம் மட்டும் பாடி அதற்கு மேல் தெரியாமல் திரு திருவென முழிக்கிறார் மதுமிதா.






 


விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் முதல் நாமினேஷன் நேற்று தொடங்கியது. இதனால் நேற்று முதல் பிக் பாஸ் சீசன் 5 சுவாரஸ்யாமாக தொடங்கியுள்ளது. இந்நிலையில், 11-வது நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியானது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போட்டியாளர் தங்களது வாழ்க்கை பயணத்தை பகிர்ந்து வரும் நிலையில், இன்று நிரூப் நந்தகுமார், நதியா சங் ஆகியோர் தங்களது கதைகளை பகிர்ந்து கொள்ள இருக்கின்றனர்.


இன்று வெளியான இரண்டாவது ப்ரொமோவில், “அம்மா ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு, எனக்கு அம்மா மேல என்னிக்கு ரொம்ப வெறுப்பு வந்துச்சுனா, போலீஸ்காரங்ககிட்ட அடி வாங்க வச்சாங்க. என் லைஃப் முழுக்க வேலை வேலைனு இருந்திருக்கேன். நான் என்னோட டீன் ஏஜ் வயச அனுபவிச்சதில்ல. காலேஜ் லைஃப் அனுபவிச்சதில்ல. மனுஷங்க கொடுக்காத ரெகக்னிஷன ஒரு ஆப் கொடுத்திச்சு” என நதியா சங் பேசியுள்ளார். 


 






இன்று வெளியான முதல் ப்ரொமோவில், “நான் உள்ள வரேன்னு தெரியும்போது நிறைய பேரு ஷேர் பண்ணிருந்தீங்க. யாஷிகாவோட எக்ஸ்-பாய்ஃப்ரெண்டு உள்ள வரான்னு. நான் பெருமையா சொல்றேன். யாஷிகாதான் நான் இங்க வரதுக்கு காரணம். இது சொல்றதுக்கு எந்த அசிங்கமும் கிடையாது. நிறைய பேரு கேப்பாங்க, ஆனா, அவதான் எனக்கு ஒரு வாழ்க்கையை காட்டினா. மீடியா இண்டஸ்ட்ரில எந்த தொடர்பும் எனக்கு கிடையாது, அவதான் எனக்கு காட்டினா. ஏன் ஒர் பெண்ணால ஒரு பையன் வளர கூடாதா? பசங்களால நிறைய பெண்கள் வளரும்போது, ஒரு பெண்ணால ஒரு பையன் வளரக் கூடாதா?” என நிரூப் பாஸ்ட்டீவாக பேசி முடிக்கிறார். இதை கேட்டுக் கொண்டிருந்த மற்ற போட்டியாளர்கள் விசில் அடித்து, கைத்தட்டி கொண்டாடினர்.