மக்களிடம் மிகுந்த வரவேற்பைப்பெற்ற பிக்பாஸ் ஷோவின் சீசன் 5 முடிவடைந்தவுடனே பிக்பாஸ் அல்டிமேட் எனும் 24 மணி நேர பிக்பாஸ் நிகழ்ச்சி ஹாட்ஸ்டாரில் ஒளிப்பரப்பாகி வருகிறது. ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக நிகழ்ந்துக்கொண்டிருக்கும் இந்நிகழ்ச்சி எப்போது சூடுபிடிக்கும் என ரசிகர்கள் காத்திருந்தனர்.


கடந்த 5 சீசன்களையும் தொகுத்து வழங்கிய கமல் அடுத்தடுத்து படங்களில் நடிக்க இருப்பதால், பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக, நடிகர் சிம்பு தற்போது நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில், 50 நாட்களை எட்டியுள்ள பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில், டாஸ்குகளின் கடினத் தன்மை விவாதப் பொருளாகியுள்ளது.


லக்ஸுரி பட்ஜெட் டாஸ்க்:


இந்த வாரம் பிக் பாஸ் அல்டிமேட் வீட்டில் லக்சரி பட்ஜெட் டாஸ்க் மிகவும் கடுமையான முறையில் நடைபெற்று வருகிறது. தூங்கவே விடாமல் சரியான உணவு இல்லாமல் போட்டியாளர்கள் கோழி டாஸ்க்கை ரொம்பவே சிரமத்துடன் எதிர்கொண்டு வருவதாக ரசிகர்கள் கூறுகின்றனர். அதுவும் ஜூலி கட்டம் கட்டப்படுவதாகவும் அவரது ரசிகர்கள் புலம்புகின்றனர்.
ஜூலி இந்த டாஸ்கின்போது இரண்டு முறை மயங்கி விழுந்துள்ளார். தூக்கமின்மையால் அவர் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது ரசிகர்கள் கொந்தளிக்கின்றன.


இந்நிலையில், நிரூப் அண்மையில் ஜூலியை தரக்குறைவாகத் திட்டியது. பின்னர் அவருடன் இணைந்து கொண்ட அனிதா சம்பத் ஜூலியை வீட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று பகிரங்கமாகப் பேசுவது என ஜூலிக்கு எதிரான சதி வலைகளும் அவரது ரசிகர்களை கொந்தளிக்கச் செய்துள்ளது.




ட்விட்டரில் ட்ரெண்டாகும் #Julie..


இந்நிலையில், போட்டிகள் ஒரு நாளைக்கு மேல் நீளக் கூடாது என்றும் சரியான உணவு மற்றும் தூக்கம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்றும் #Julie ஹாஷ்டேக்கை போட்டு டிரெண்ட் செய்து வருகின்றனர். 


வீட்டுக்குப் போகபோவது யார்?


பிக்பாஸ் அல்டிமேட் வீட்டில் ஜூலிக்கு எதிராக கோஷங்கள் எழ வெளியில் அல்டிமேட் ரசிகர்கள் என்னவோ அனிதா சம்பத்திற்கு கட்டம் கட்டியுள்ளனர். நிரூப்புடன் சேர்ந்து கொண்டு ஜூலிக்கு எதிராக பேசி வரும் அனிதா சம்பத்தை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என ரசிகர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.


பிக்பாஸ் அல்டிமேட் வீட்டிலேயே அனிதா சம்பத் குறைவான ஓட்டுக்களுடன் கடைசி இடத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அனிதா சம்பத்துக்கு அடுத்தபடியாக சுருதியும் வைல்டு கார்டு என்ட்ரி சதீஷும் டேஞ்சர் ஜோனில் இருக்கின்றனராம். ஆகையால் ரசிகர்கள் வாக்களிப்பைப் பொறுத்து இந்த மூவரில் இந்த வாரம் எவிக்‌ஷன் யார் என்பது விரைவில் தெரிந்துவிடும். ஆகையால் இந்த வார எவிக்‌ஷனை பிக்பாஸ் அல்டிமேட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.