விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு மிக பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. கடந்த ஆறு சீசன்களாக நல்ல வரவேற்பை பெற்ற இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விரைவில் தொடங்க உள்ளது என்றும் அதற்கான ப்ரோமோ வீடியோவுக்காக ஏற்கனவே கமல்ஹாசன் ஷூட்டிங் முடித்து விட்டார் என்றும் தகவல்கள் சில வாரங்களுக்கு முன்னர் இணையத்தில் வெளியகி வைரலாகியது. பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சி குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிந்த பின்னர் தொடங்கும் ஆனால் இந்த சீசன் சற்று தாமதமாக அடுத்த மாத இறுதியில் தொடங்க உள்ளது என கூறப்படுகிறது.
பிக்பாஸ் போட்டியாளர்கள்:
பொதுவாகவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் பலரும் மிகவும் பிரபலமடைந்து பல வாய்ப்புகளை பெற்று செலிபிரிட்டியாக வளம் வருகிறார்கள். அதனால் இந்த போட்டியில் கலந்து கொள்ள தங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்குமா என ஆவலுடன் பல பிரபலங்களும் காத்து கொண்டு இருக்கிறார்கள். அந்த வகையில் இந்த சீசனில் போட்டியாளர்களாக கலந்து கொள்ள சில பிரபலங்களிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அவர்கள் யார் யார் எந்த அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்பது குறித்து பார்க்கலாம்.
போட்டியாளர்கள் பட்டியல்?
சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் மிகவும் பிரபலமான ஒரு நடிகர், பல ரியாலிட்டி ஷோக்களில் கூட மிகவும் ஸ்போர்ட்டிவாக பங்கேற்றுள்ள நடிகர் பிருத்திவிராஜ் என்ற பப்லுவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இவர் கலந்து கொண்டால் நிகழ்ச்சி மிகவும் பரபரப்பாக இருக்கும் என்பதால் அவர் தேர்வு செய்யப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
சின்னத்திரை தொகுப்பாளினியாக இருந்து பின்னர் சீரியல் ஹீரோயினாகவும், வெள்ளித்திரையில் ஹீரோயின் தங்கையாகவும் நடித்து பிரபலமான நடிகை ஜாக்குலின் ஒரு போட்டியாளராக இருக்கலாம் என கூறப்படுகிறது. சமீப காலமாக அவர் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் இருப்பதால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.
ஓட்டுநர் ஷர்மிளா:
சர்ச்சை கருத்துகளால் மிகவும் பிரபலமாக இருக்கும் ரேகா நாயர், நடிகர் ரச்சித்தாவின் முன்னாள் கணவர் தினேஷ் கார்த்திக் உள்ளிட்டோரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. மேலும் சமீபத்தில் கோவையில் தனியார் பேருந்து ஓட்டுநராக இணையத்தில் மிகவும் பிரபலமான ஷர்மிளா இந்த நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொள்ள கூடும் என கூறப்படுகிறது. அதற்கான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதன் மூலம் பிரபலமாகலாம் என பெரிய கனவுகளோடு தான் போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைகிறார்கள். ஆனால் ஒரு சிலரால் மட்டுமே அங்கே கடைசி வரை தங்களை நிலைநிறுத்தி கொள்ள முடிகிறது. இது வெறும் தகவல்களே தவிர பிக் பாஸ் போட்டியில் கலந்து கொள்ள போகும் உறுதியான போட்டியாளர்களின் லிஸ்ட் இன்னும் வெளியாகவில்லை.