பிக் பாஸ் தமிழ் சீசன் 5-ஐ அடுத்து ஓடிடியில் ஒளிபரப்பாகி வருகிறது பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பார்வையாளர்களிடம் பிரபலமானதால், பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்றிருக்கிறார்.


பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிகாக  13 போட்டியாளர்களுடன் 42 நாட்களுக்கு தொகுத்து வழங்கும் வகையில், இந்த நிகழ்ச்சி தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த புதிய நிகழ்ச்சியில் பிக்பாஸில் டைட்டில் வெற்றியாளர்களைத் தவிர மற்ற பிக்பாஸ் சீசன் போட்டியாளர்களும் பங்கேற்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. பிக் பாஸ் அல்டிமேட் 24*7 பிக் பாஸ் தமிழ் OTT என்னும் பெயரில் இதற்கான லோகோவை சிவகார்த்திகேயன் சீசன் 5-ன் இறுதிபோட்டியன்று வெளியிட்டார்.


மேலும் படிக்க: Malavika Slams a Media: போட்டோஷாப்பில் ஆபாசமாக சித்தரிக்கப்பட்ட புகைப்படம்: உண்மையான போட்டோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்






பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், பிக் பாஸ் சீசன் 5-ல் பங்கேற்றதற்காக இன்னும் தனக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என்பதை நிகழ்ச்சியின்போது போட்டு உடைத்திருக்கிறார் தாமரைச் செல்வி. 


குடும்ப பிரச்சனையால் அதிக கடன் இருப்பதாக அடிக்கடி தாமரைச் செல்வி தெரிவித்திருக்கிறார். இந்த கடனை அடைப்பதற்காகவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக பகிர்ந்திருக்கிறார். இந்நிலையில், பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின்போது, வீட்டில் உள்ள பொருட்களை ஏதாவது உடைத்தால் அதை சம்பளத்தில் பிடித்துவிடுவார்கள் என பாலாஜி சொல்ல, “எனக்கு இன்னும் சம்பளமே வர்ல, சம்பளத்தில் இதெல்லாம் பிடிக்கிறார்களா, இல்லையானு எனக்கு எப்படி தெரியும்” என கேட்டிருக்கிறார். அதற்கு பதிலளித்த பாலாஜி, “அதெல்லாம் கரெக்டா வந்துடும்” என தெரிவித்திருக்கிறார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண