டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது முதல் OTT பிரத்தியேகமான பிக்பாஸ் தமிழ் சீசனை நேற்று முதல் 24x7 ஸ்ட்ரீமிங் செய்யப்படும் வருகிறது. இந்த 2022 ஆம் ஆண்டின் முதல், மிகப்பெரிய OTT அறிமுகத்துடன், கமல்ஹாசன் BiggBossUltimate-ஐயும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து தொகுத்து வழங்கி வருகிறார்.
மினுமினுக்கும் வீடு.. அதிரடி மாற்றங்களுடன் கோலாகலமாக தொடங்கிய BiggBoss Ultimate நிகழ்ச்சியில் முதலில் கமல்ஹாசன் வனிதாவை அறிமுகப்படுத்தினார். அதனைதொடர்ந்து, ஜூலி, சுரேஷ் சக்கரவர்த்தி, நிரூப், சாரிக், சினேகன், அனிதா சம்பத்,தாடி பாலாஜி உள்பட 14 போட்டியாளர்கள் அடுத்தடுத்து வீட்டிற்குள் களமிறங்கினர்.
முன்னதாக, விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட பிக்பாஸ் 5 சீசன்களும் எடிட் செய்யப்பட்டு வெளியிடப்பட்டு வந்தது. தற்போது, 24 மணிநேரமும் நேரடியாக OTT தளத்தில் ஒளிபரப்பப்பட்டு வருவதால் பிக்பாஸ் ரசிகர்களுக்கு எந்த அளவுக்கு ஆர்வத்தை தூண்டும் என்று தெரியவில்லை.
24 மணிநேரமும் ஒளிப்பரப்பி வருவதால் போடுவதற்கு கண்டென்ட் இல்லாமல் கிடைத்த அனைத்தையும் போட்டு வருகின்றனர். அப்படித்தான் தாடி பாலாஜி சமீபத்தில் சக போட்டியாளர் ஒருவரிடம் தனது மனைவி நித்யா குறித்து ஏதோ தவறாக பேசியுள்ளார். அந்த வீடியோவும் இணையத்தில் பரவி மிகவும் வைரலானது.
இந்தநிலையில், தாடி பாலாஜிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவரது மனைவி நித்யா பகிரங்கமாக கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில், "பாலாஜி உனக்கு அவ்வளவுதான் மரியாதை. நீ எவ்வளவு மோசமானவர் என்று எனக்கு மட்டும்தான் தெரியும். என்னையும், எனது மகளையும் நீ ஆபாசமாக பேசிய வீடியோ என்னிடம் ஆதாரமாக இருக்கிறது. உன்னொரு வார்த்தை என்னை பற்றி நீ தவறாக பேசினால் நீ வீசிய அனைத்து வீடியோவையும் சமூக வலைதளங்களில் பதிவிடுவேன்.தேவைபட்டால், அந்த வீடியோக்களை நீதிமன்றத்திலும் சமர்பிப்பேன்.
ஒருவேளை நான் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தால் உன்னை சும்மா விடமாட்டேன். இதனால் எனக்கு எந்த பிரச்னை வந்தாலும் பரவாயில்லை. ஏனென்றால் நீ அந்த அளவுக்கு ரொம்ப மோசமானவர்" என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, தாடி பாலாஜி மகள், அப்பா மீடியா முன்னாடி என் மீது பாசம் இருக்குற மாதிரி நடிக்காதீங்க. அம்மா பற்றியும்தவறாக இனிமேல் இப்படி பேசாதீங்க. நான் இன்னும் சின்ன குழந்தை இல்லை. எனக்கு நல்லது கெட்டது எல்லாம் தெரியும். இனியும் உங்களை நான் நம்ப மாட்டேன், மீண்டும் இதுபோல் அம்மாவை தவறாக பேசினால் டெய்லி ஒரு வீடியோவை நாங்கள் வெளியிடுவோம் என்று தெரிவித்துள்ளார்.