பிக்பாஸ் தமிழ் 5 நிகழ்ச்சி கடந்த வாரம் முடிவடைந்த நிலையில், பிக்பாஸ் தயாரிப்பாளர்கள் புது முயற்சியாக பிக்பாஸுக்கென்று பிரத்யேக OTT தளத்தை தொடங்கி உள்ளனர். 13 போட்டியாளர்களுடன் 42 நாட்களுக்கு தொகுத்து வழங்கும் வகையில், இந்த நிகழ்ச்சியை மறுவடிவமைக்கும் பணியில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த புதிய நிகழ்ச்சியில் பிக்பாஸில் டைட்டில் வெற்றியாளர்களைத் தவிர அனைத்து பிக்பாஸ் சீசன் போட்டியாளர்களும் பங்கேற்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தநிலையில், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளம் போன்று பிக்பாஸுக்கென்று பிரத்யேக ஓடிடி தளம் வெளியிடப்பட்டது. பிக் பாஸ் அல்டிமேட் 24-7 பிக் பாஸ் தமிழ் OTT என்னும் பெயரில் இதற்கான லோகோவை சிவகார்த்திகேயன் இறுதிபோட்டியன்று வெளியிட்டார்.
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது முதல் OTT பிரத்தியேகமான பிக் பாஸ் தமிழ் சீசனை ஜனவரி 30 முதல் 24x7 ஸ்ட்ரீமிங் செய்கிறது. 2022 ஆம் ஆண்டு முதல், மிகப்பெரிய OTT அறிமுகத்துடன்,கமல்ஹாசன் BiggBossUltimate-ஐயும் தொகுத்து வழங்கவுள்ளார், இதை ரசிகர்கள் மேடையில் பிரத்யேகமாக பார்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் BiggBossUltimate க்குள் செல்லும் நபரை விஜய் டிவி அறிவித்து வருகிறது. அதன்படி தற்போது அபிராமி, பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லவுள்ளார். இது தொடர்பான டீசரையும் வெளியிட்டுள்ளது விஜய் டிவி. அதில் '' அபிநயமான பெண் ஒருவர் ஒரு ஆட்டத்தில் தோத்துட்டு சோகமா வீட்டுக்கு வந்தாளாம். ஆனாலும் தொடர்ந்து பயிற்சி செய்தாளாம்.
மறுபடி வாய்ப்பு வந்துச்சாம் என பிக்பாஸ் அல்டிமேட் குறித்து பேசுகிறார். மேலும் இந்த அபியோட ஆட்டத்த இனிமேதான் பாக்கபோறீங்க என ரகளையாக செல்கிறார் அபிராமி. முன்னதாக சினேகன், ஜூலி, வனிதா, சுரேஷ் சக்கரவர்த்தி ஆகியோர் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லவுள்ளது குறிப்பிடத்தக்கது.
அடுத்தடுத்து யார்..யாரெல்லாம் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் 24 மணிநேரமும் இனி பிக்பாஸ் வீட்டிற்குள் நடப்பதை கண்டுகளிக்கலாம் என்பதால் ரசிகர்கள் பலரும் உற்சாகம் அடைந்துள்ளனர். மேலும் இனி வரும் நாட்களில் அடுத்த போட்டியாளர்கள் யார் யார் என்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்ற நம்பிக்கையுடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்