பிக்பாஸ் நிகழ்ச்சி நான்கு வாரங்களை கடந்து 5 வது வாரம் வெற்றிகரமாக சென்றுக் கொண்டிருக்கிறது. என்னதான் உலக நாயகன் வார இறுதியில் வீடு சூடு பிடிக்க ஆரமித்துவிட்டது என புரமோவில் பரபரப்பை கொண்டு வந்தாலும் , முன் இருந்த சீசனை ஒப்பிடுகையில் சீசன் 5 இல் சுவாரஸ்ய பஞ்சம் நிறையவே இருக்கிறது. ஆனாலும் ஒவ்வொரு வாரமும் ஒரு நபர் போட்டியிலிருந்து வெளியேற்றப்படுவது தவறாமல் நடக்கிறது. அந்த வகையில் கடந்த வாரம் ஸ்ருதி பெரியசாமி பிக்பாஸ் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.வெளியே வந்த ஸ்ருதி , முதலில் போட்டியிலிருந்து நாமினேட் செய்யாமலேயே வெளியேறிய திருநங்கை நமீதாவை சந்தித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஒரு தொகுப்பாக , இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் பதிவேற்றியுள்ளார் நமீதா மாரிமுத்து.
“சகோதரிகளின் இலக்கு “ என குறிப்பிட்டு மேயாத மான் திரைப்படத்தின் “தங்கச்சி” பாடலை பின்னணியில் இசைக்க செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. பிக்பாஸ் ஐந்தாவது சீசன் 18 போட்டியாளர்களுடன் வெற்றிகரமாக ஆரமித்து சென்றுக்கொண்டிருந்தது. ஆனால், நிகழ்ச்சி தொடங்கிய சில நாட்களிலேயே நமீதா மாரிமுத்து திடீரென பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இதற்கான காரணங்கள் இன்றளவும் தெளிவாக தெரியவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் சூழலில் அது குறித்து நமீதா விளக்கம் அளிக்க கூடாது என்ற நிபந்தனை உள்ளதாக தெரிகிறது.
கடந்த வாரம் போட்டியிலிருந்து வெளியேறிய ஸ்ருதி தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ஒரு பதிவிட்டிருந்தார். அதில் எனக்கு பிக்பாஸ் பட்டம் பெற்றிருந்தால் என்ன மகிழ்ச்சி கிடைக்கும் அதே மகிழ்ச்சி தற்போதும் உள்ளது. உங்கள் அன்பிற்கு ஆதரவிற்கும் நன்றி என குறிப்பிட்டிருந்தார்.