Bigg Boss 5 Tamil Day 41 Promo: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் அக்டோபர் 31-ஆம் தேதி எபிசோடின் முடிவில் சின்னப்பொன்னு வெளியேற்றப்பட்டார். நாடியா, அபிஷேக், சின்னப்பொன்னை அடுத்து நான்காவதாக ஸ்ருதி எலிமினேட் செய்யப்பட்டார். இந்நிலையில், இந்த வாரத்திற்கான தலைவராக அபினய் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, நாணயத்தை பயன்படுத்தி இசைவானி தலைவராக பொறுப்பேற்று கொண்டார்.
அதனை அடுத்து, 41வது நாளுக்கான முதல் ப்ரோமோ சற்றுமுன் வெளியானது. இன்று சனிக்கிழமை என்பதால், கமல் வரும் ஸ்பெஷல் எபிசோட் ஒளிபரப்பாக உள்ளது. முதல் ப்ரொமோவில் பேசிய அவர், ”வெளியே புயலும் மழையும் ஓய்ந்த சாயல் தெரிகிறது. வீட்டிற்குள் புயல் சின்னங்கள் உருவாகி இருக்கின்றன. பொம்மைகளை வைத்து விளையாட சொன்ன ஒரே காரணத்திற்காக இவ்வளவு குழந்தைத்தனமாக மாற வேண்டிய அவசியமில்லை. இப்போது இவர்களுடைய விளையாட்டை மல்யுத்தத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. எது எல்லை, எது வரம்பு என்பதை இவர்களுக்கு சுட்டிக்காட்டியாக வேண்டும்” - என கமல் சொல்லி முடிக்கிறார்.
இதோ அந்த ப்ரோமோ வீடியோ உங்கள் பார்வைக்கு..
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்