இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடைபெறும் காட்சிகள் ரசிகர்களை முகம் சுழிக்க வைக்கும் அளவுக்கு இருப்பதால் இணையத்தில் கடும் விமர்சனம் எழுந்துள்ளது. 


இந்தி, தமிழ், தெலுங்கு,மலையாளம்,கன்னடம் என பல மொழிகளில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 100 நாட்கள் வீட்டுக்குள் போட்டியாளர்களிடையே நடைபெறும் அன்பு, சண்டை, காதல் என பல பரிணாமங்களை காணலாம். தமிழில் இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். ஒரு சில எபிசோடுகளை நடிகை ரம்யா கிருஷ்ணனன் வழங்கினார். 


தொடந்து ஓடிடியிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாக தொடங்கியது, முதலில் கமல்ஹாசனே ஓடிடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நிலையில், பின் விலகினார். இதனைத் தொடர்ந்து நடிகர் சிலம்பரசன் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இத்தகைய நிகழ்ச்சியில் அவ்வப்போது சர்ச்சையான சம்பவமும் நடைபெறும். 


ஓவியா - ஆரவ் இடையேயான மருத்துவ முத்தம், பெண் போட்டியாளர்களிடையே அசல் கோலார் அத்துமீறியதாக எழுந்த புகார், பெண்கள் பற்றி நடிகர் சரவணன் சர்ச்சையான கருத்துகளை தெரிவித்தது என பல சம்பவங்களை ரசிகர்கள் கண்டுள்ளனர். ஆனால் இந்தியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி, ஆபாசப் படம் ரேஞ்சுக்கு காட்சிகளை கொண்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 


சேனலில் இதுவரை பிக்பாஸ் சீசன் 16 வரை ஒளிபரப்பாகியுள்ளது. ஓடிடியில் தற்போது 2வது சீசன் சென்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் நடிகை ஆகான்ஷா பூரிக்கு சக போட்டியாளரான ஜத் ஹாதிக் லிப்-லாக் முத்தம் கொடுத்த காட்சிகள் பார்வையாளர்களிடையே பேசு பொருளாக மாறி, இணையத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளது. 


போட்டி ஒன்றில் எதிரணி வீரர்கள் இருவருக்கும் முத்தம் கொடுப்பது தொடர்பான டாஸ்க் ஒன்றை கொடுத்தனர். ஆகான்ஷா மற்றும் ஜத் ஹாதிக் இதனை செய்ய மறுப்பார்கள் என நினைத்தனர். ஆனால் சற்றும் எதிர்பாராத வகையில் முத்தமிட்டனர். பின்னர் இந்த சம்பவத்தை மிகவும் அசௌகரியமாக  உணர்ந்ததாக அகான்க்ஷா கூறியுள்ளார்.  முத்தம் என்னை சங்கடப்படுத்தியது என்பதை ஜாட் புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்பினேன், அவர் என்னுடன் வந்து பேசுவார் என நினைத்தேன். அது நடக்கவில்லை’ என தெரிவித்தார். 


டிஆர்பியை ஏற்ற சர்ச்சைக்குரிய காட்சிகளையும், போட்டிகளையும் ஒளிபரப்பி ரசிகர்களிடையே கடும் எதிர்ப்புகளை பிக்பாஸ் நிகழ்ச்சி பெற்று வருகிறது. நடிகை ஆகான்ஷாபுரி தமிழில் கார்த்தி நடித்த அலெக்ஸ் பாண்டியன் படத்தில் நடிகர் சந்தானத்தில் தங்கைகளில் ஒருவராக நடித்திருந்தார். மேலும் விஷால் நடித்த ஆக்‌ஷன் படத்திலும் இவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.