விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பிக்பாஸ். கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகும் இந்த தொடருக்கு தமிழ்நாட்டில் நிறைய ரசிகர்கள் உள்ளனர். முதல் சீசனில் இருந்து தற்போது ஒளிபரப்பான 5ஆவது சீசன் வரை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். 


ஒவ்வொரு ஆண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கும்போதெல்லாம், மற்ற் நிகழ்ச்சிகள், தொடர்கள் எல்லாம் காலி தான் என்று ரசிகர்கள் கூறுவார்கள். அந்தளவிற்கு அந்த நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் பெரிதாக பேசப்பட்டு வந்தது. கடந்த சீசன்களை போல் இல்லாமல் இந்த சீசன் கொஞ்சம் சுமார்தான் என்ற கருத்து எல்லார் மனதிலும் எழுந்தது. 




பொதுவாக, அனைத்து பிக்பாஸ் நிகழ்ச்சிகளிலும் ஒரு குறிபிட்ட துறையில் சாதனை படைத்த நபர்களை போட்டியாளர்களாக அழைத்து வந்து பிக்பாஸ் வீட்டுக்குள் 100 நாட்கள் தங்க வைப்பர். ஆனால், கடந்த இரண்டு சீசன்களிலும் விஜய் டிவியில் நடித்து கொண்டிருந்த நண்டு சுண்டுகளை போட்டியாளர்களாக பங்கேற்ற வைத்தனர். 


போட்டியாளர்கள் தேர்வு : 


முதல் சீசன் மீதான எதிர்பார்ப்பு அதனை பூர்த்தி செய்யவே செய்தது. ஜூலி, ஓவியா என பரபரப்பாகவே இருந்தது. ஆர்மிகளும், ஹேட்டர்களும் சோஷியல் மீடியாக்களில் அடித்து கொண்டனர். அதன் தொடர்ச்சியாக வந்த இரண்டாவது சீசனும் ரித்திகா, ஜனனி ஐயர் என்ற பெயர் சொல்லும் பிரபலங்கள் தென்பட்டனர். 


அதேபோல், கவின், முகேன், சாண்டி மாஸ்டர்,தர்சன்,லாஸ்லியா பங்கேற்ற பிக்பாஸ் சீசன் 3 பட்டிதொட்டி எங்கும் பட்டையை கிளப்பி டிஆர்பியில் முதலிடம் பிடித்தது. அதன் பிறகு கடந்த சீசனில் ஆரி அர்ஜுனன் வெற்றி பெற்று டைட்டிலையும் தட்டி சென்றார். 




இந்தநிலையில், இந்த பிக்பாஸ் சீசன் 5 தொடங்கிய சிறிது நாளிலே ராஜு ஜெயமோகன் தான் டைட்டில் வின்னர் என்றும், பிரியங்காதான் இரண்டாவது இடம் என்றும் சோசியல் மீடியாக்களில் வலம் வர தொடங்கி விட்டது. அதேபோல்தான் இந்த நிகழ்ச்சியில் சுவாரசியமற்று நகர தொடங்கியது. மக்களின் கருத்துகளின்படி, அட போங்கப்பா எல்லாம் விஜய் டிவி ஆர்டிஸ்ட், இத பார்த்தாலும் ஒன்னு தான், பார்கலேனாலும் ஒன்னுதான் என்று புஷ் என்று போய்விட்டது. 


 






தொடர்ந்து ராஜு என்ற ஒற்றை பிம்பத்தையே அடிப்படையாக கொண்டு நிகழ்ச்சி சென்றதால் பிக்பாஸ் பாதிலேயே படுத்தேவிட்டது அய்யா என்று பிக்பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் முதல் ரசிகர்கள் வரை கதற தொடங்கினர். 


கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு டிஆர்பி ரேட்டிங் படுமோசமான நிலைமைக்கு சென்றது குறிப்பிடத்தக்கது. அப்புறம் என்னப்பா அடுத்து பிக்பாஸ் ஓடிடி தளம் வருதாம் அதுவாச்சும் எடிட் பண்ணாம போட சொல்லி பாருங்க.. எப்பவும் போல உங்க ஆதரவ தாருங்க..நெக்ஸ்ட் மீட் பண்ணுவோம். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண