பிக்பாஸ் சீசன் 5ன் 3வது புரோமோ வெளியாகியுள்ளது. நேற்றைய எபிசோடில் சின்னப்பொண்ணு சொன்ன கதைக்கு டிஸ்லைக் போட்டார் ராஜு. இன்று அவரை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். இந்நிலையில் அபிநய், பிரியங்கா தேஷ்பாண்டே, இசைவாணி ஆகியோரெல்லாம் டைனிங் ஹாலில்  சிரித்துப் பேசுக்கொண்டிருக்கிறார்கள். அவருக்கு "அக்காவுக்கு தம்ப்ஸ் டவுன்" கொடுத்தார்ல அதற்காக மன்னிப்பு கேட்டு சமாளிக்க போயிருக்காரு என பிரியங்கா, ராஜு பற்றி மற்ற போட்டியாளர்களிடம் கமெண்ட் அடித்துக் கொண்டிருந்தார். ரன்னிங் கமெண்ட்ரி கொடுத்து,பிரியங்கா குலுங்கி சிரித்த சிரிப்பில் அவரது மைக் கீழே நழுவி விழுந்துவிடுகிறது. ஜாலியாக சிரித்துப் பேசும் பிரியங்காவை பிக்பாஸ் அழைத்து, “மைக்க சரியா மாட்டுங்க என்கிறார் பிக்பாஸ். சரி ஒகே பாஸு என பிரியங்கா சொன்னதும் ஒரே சிரிப்பலை. ஏற்கெனவே பல்வேறு சீசன்களிலும் அதில் கலந்துக்கொண்ட பங்கேற்பாளர்கள் மைக்கை சரியாக போடாத நிலையில், மைக் போட சொல்லுவார் பிக்பாஸ்.


இந்த சீசனிலும் ஒவ்வொரு முறையும் பிக்பாஸ் சொல்ல வேண்டியிருக்கும் போல. இதற்கு முந்தைய சீசன்களிலெல்லேம் மைக்கில் பங்கேற்பாளர்களின் பெயர் இடம்பெற்றதில்லை. ஆனால் இந்த சீசனில் புதுமையாக ஒவ்வொரு போட்டியாளர்களின் பெயர்களும் அச்சிடப்பட்டுள்ளன.




முன்னதாக Day 3, வெளியான இரண்டாவது ப்ரோமோவில் பேசும் சுருதி, “என் கலரை வெச்சே என்னை டாமினேட் பண்ணியிருக்காங்க. எனக்கு அழணும்னு தோணுச்சுன்னா அழுவேன். அதுதான் என்னை இங்கே கொண்டுவந்து நிறுத்தியிருக்கு. இங்க வர்றதுக்கு என்னோட கலர்தான் காரணம்” என்கிறார். உடனே ஃபயர் விடும் இசைவாணி, உன்னை ஒதுக்குறாங்கன்னா செதுக்குறாங்கன்னு அர்த்தம், உனக்கு தோணுச்சுன்னா நீ அழு என்கிறார். 


 



 


அதற்குமுன்பாக வெளியான முதல் புரோமில், இமான் அண்ணாச்சி கதை சொல்லும்போது சிபி சிரித்ததாக ப்ரோமோவில் உணர முடிகிறது. ஆளாளாக்கு ஹை பிட்சில் சத்தம் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். எந்த நேரத்தில் அபிஷேக் பிக்பாஸிடம் சண்டை வராதுன்னு சவால் விட்டாரோ, 3 நாளே முட்டிக்கொண்ட ப்ரோமோ வெளியாகியுள்ளது. ஏண்டா சிரிக்குற கம்முனு இருடான்னு சொல்லவேண்டியதுதானே என சிபி கோபமாக எழுந்து போகும் காட்சி காட்டப்படுகிறது. சண்டை ஆரம்பிக்கப்போகுது வீட்ல என்கிறார் நமீதா மாரிமுத்து.


நேற்று எபிசோடில், சிபியை கன்ஃபெஷன் ரூமுக்கு கூப்பிடுகிறார் பிக்பாஸ். கிட்னி உருவப்போவது தெரியாமல் துள்ளிக்குதித்து ஓடுகிறார் சிபி. ஒரு டாஸ்க் பேப்பரைக் கொடுத்து எல்லாருக்கும் படித்துக்காட்ட சொல்கிறார். வெளியில் போனதும் அந்த டாஸ்க்கை அறிவிக்கிறார் சிபி. “பிரபஞ்சமே கதைகளால் ஆனது. இங்க எல்லாத்துக்கும் ஒரு கதை இருக்கு. பிக்பாஸ் வீட்டுக்கும் ஒரு கதை இருக்கு. அந்தக் கதைகளை நீங்க சொல்லணும். பிடிச்சா லைக் சிம்பிள் கொடுங்க, பிடிக்கலன்னா டிஸ்லைக் கொடுங்க. ரொம்ப பிடிச்சுபோச்சு, மனசோட ஒன்றிப்போச்சுன்னா ஹார்ட் சிம்பிள் கொடுங்க” என கொடுக்கப்பட்டிருக்கிறது டாஸ்க்.