Day 3, வெளியான இரண்டாவது ப்ரோமோவில் பேசும் சுருதி, “என் கலரை வெச்சே என்னை டாமினேட் பண்ணியிருக்காங்க. எனக்கு அழணும்னு தோணுச்சுன்னா அழுவேன். அதுதான் என்னை இங்கே கொண்டுவந்து நிறுத்தியிருக்கு. இங்க வர்றதுக்கு என்னோட கலர்தான் காரணம்” என்கிறார். உடனே ஃபயர் விடும் இசைவாணி, உன்னை ஒதுக்குறாங்கன்னா செதுக்குறாங்கன்னு அர்த்தம், உனக்கு தோணுச்சுன்னா நீ அழு என்கிறார். 





இமான் அண்ணாச்சி கதை சொல்லும்போது சிபி சிரித்ததாக ப்ரோமோவில் உணர முடிகிறது. ஆளாளாக்கு ஹை பிட்சில் சத்தம் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். எந்த நேரத்தில் அபிஷேக் பிக்பாஸிடம் சண்டை வராதுன்னு சவால் விட்டாரோ, 3 நாளே முட்டிக்கொண்ட ப்ரோமோ வெளியாகியுள்ளது. ஏண்டா சிரிக்குற கம்முனு இருடான்னு சொல்லவேண்டியதுதானே என சிபி கோபமாக எழுந்து போகும் காட்சி காட்டப்படுகிறது. சண்டை ஆரம்பிக்கப்போகுது வீட்ல என்கிறார் நமீதா மாரிமுத்து. பிக்பாஸே சந்தோஷமாய்யா?


நேற்று எபிசோடில், சிபியை கன்ஃபெஷன் ரூமுக்கு கூப்பிடுகிறார் பிக்பாஸ். கிட்னி உருவப்போவது தெரியாமல் துள்ளிக்குதித்து ஓடுகிறார் சிபி. ஒரு டாஸ்க் பேப்பரைக் கொடுத்து எல்லாருக்கும் படித்துக்காட்ட சொல்கிறார். வெளியில் போனதும் அந்த டாஸ்க்கை அறிவிக்கிறார் சிபி. “பிரபஞ்சமே கதைகளால் ஆனது. இங்க எல்லாத்துக்கும் ஒரு கதை இருக்கு. பிக்பாஸ் வீட்டுக்கும் ஒரு கதை இருக்கு. அந்தக் கதைகளை நீங்க சொல்லணும். பிடிச்சா லைக் சிம்பிள் கொடுங்க, பிடிக்கலன்னா டிஸ்லைக் கொடுங்க. ரொம்ப பிடிச்சுபோச்சு, மனசோட ஒன்றிப்போச்சுன்னா ஹார்ட் சிம்பிள் கொடுங்க” என கொடுக்கப்பட்டிருக்கிறது டாஸ்க்.


முதலில் இசைவாணியைக் கூப்பிடுகிறார் பிக்பாஸ். “அப்பாவுக்கு ஹார்பர்ல வேலை. திடீர்னு வேலையில்ல. என்ன பண்றது. காசு கொடுக்கமுடியாதே. வீட்டை விட்டு போயிடுங்கன்னு சொன்னாங்க. ஒருவேளை சாப்பாடுதான் இருக்கும். அதையும் நான் சாப்பிடணும்னு அப்பா சாப்பிடமாட்டார்” என்றார் இசைவாணி எல்லாருடைய கண்களிலும் கண்ணீர்.  அடுத்து அதிரடியாக இசை பாடிய கானாவில் கண்ணீரெல்லாம் காலி. அடுத்ததாக சின்னப்பொண்ணு பேசினார். “தினமும் குடிக்கும் கூழைக் கொடுத்துவிட்டு, நெல்லுச்சோற்றை கேட்பேன்” என வாழ்க்கை முழுக்க வறுமை துரத்திய கதையைச் சொல்லிவிட்டு ஒரு நாட்டுப் பாடலை பாடினார். எல்லோரும் லைக்கும், லவ்வும் போட்டுக்கொண்டிருக்கும்போது, ராஜு எழுந்து போய் டிஸ்லைக் போட்டுவிட்டு, கலைஞர்கள் கண்ணீர் விடக்கூடாது. ஜெயிச்ச கதையைச் சொல்லணும் என்கிறார். பிழைப்பில் மண்ணை வாரி போட வந்த லகடபாண்டி என பிக்பாஸ் திட்டுவது காதில் விழுகிறது. “வெற்றி நிச்சயம் வேத சத்தியம்” மட்டும் துணிச்சல் கிடையாது ராஜு ப்ரோ. கண்ணீரும், தன் அவலக் கதையைச் சொல்வதும் கூட துணிச்சல்தான்.


இசைவாணியின் கதை தனக்கு பொருந்தியதாக சொல்லி ஹக் செய்துகொண்ட ஐய்க்கிக்கு, துக்கம் தொண்டையை அடைத்தது. இன்று கொஞ்சம் கண்ணீர் ஓவர்டோஸ். சரி வீட்டுக்குள் வாஸ்து சரியில்லை என புல்வெளி வெராண்டாவுக்கு வந்தால், அங்கேயும் அம்மாவை நினைத்து அழுது ஒப்பாரி வைத்தார் அபிஷேக் ப்ரூ. எல்லோரும் தேற்றினார்கள்.