Bigg Boss 6 Tamil: 'பிக்பாஸ் 6’-இல் இந்த பிரபலத்தின் முன்னாள் மனைவி பங்கேற்கிறாரா? வெளியான தகவல்!

மோனிக்கா தனது முன்னாள் கணவருக்கு எதிராக அவரையும் அவரது அப்பாவையும் சமூவலைதளங்களில் காட்டமாக விமர்சித்து வருகிறார். இதற்கு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் இமான் மெளனம் காத்து வருகிறார்.

Continues below advertisement

பிரபல இசையமைப்பாளர் டி.இமானின் முன்னாள் மனைவி மோனிக்கா ரிச்சர்ட்  பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6ஆவது சீசனின் கலந்துகொள்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

Continues below advertisement

'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் தமிழ் பதிப்பின் ஆறாவது சீசன் இந்த ஆண்டு ஜூலை நடுப்பகுதி அல்லது ஆகஸ்ட் மாதத்தில் ஒளிபரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து ஆறாவது முறையாக கமல்ஹாசன் மீண்டும் ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்குவார் என்றும், ஏற்கனவே பிரபல போட்டியாளர்கள் தேர்வு நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

கடந்த காலங்களில் ஒவ்வொரு சீசனிலும் பெரும்பான்மையான திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பிரமுகர்கள் தவிர, ஜூலியானா மரியானா மற்றும் லாஸ்லியா மரியநேசன் போன்ற சில பொது மக்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில்,  ‘பிக் பாஸ் 6’ நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க டி. இமானின் முன்னாள் மனைவி மோனிக்கா ரிச்சர்டுடன் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இமானை திருமணம் செய்து 12 ஆண்டுகள் வாழ்ந்து வந்த நிலையில், சமீபத்தில் இருவரும் விவாகரத்து செய்தனர். அவர்களுக்கு பிளெசிகா மற்றும் வெரோனிகா ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்கள் மோனிக்காவின் பாதுகாப்பில் தற்போது இருக்கின்றனர்.


டி. இமான் சமீபத்தில் அமலியை மறுமணம் செய்து கொண்டார். அவருக்கு முதல் திருமணத்தில் ஒரு மகள் உள்ளார். மோனிக்கா தனது முன்னாள் கணவருக்கு எதிராக அவரையும் அவரது அப்பாவையும் சமூவலைதளங்களில் காட்டமாக விமர்சித்து வருகிறார். இதற்கு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் இமான் மெளனம் காத்து வருகிறார்.

 

 

பிக்பாஸில் ஒரு வேளை மோனிக்கா கலந்து கொண்டால், தனது முந்தைய திருமண வாழ்க்கை குறித்து பல தகவல் கூறுவார் என்று தெரிகிறது. பிக்பாஸ் சீசன் 6 இல் மோனிக்கா கலந்துகொள்வாரா என்று இதுவரை மோனிக்காவோ அல்லது 'பிக் பாஸ் 6' குழுவோ உறுதிப்படுத்தவில்லை.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

Continues below advertisement