நேற்று முதல் நாள் எபிசோடில் எல்லாமே சுபமாக இருந்தது. எல்லாரும் இன்னும் கொஞ்சம் ஜெல்லாக முயற்சி செய்துகொண்டிருந்தார்கள். இன்று வெளியான முதல் ப்ரோமோவில், இசைவாணி பேசிக்கொண்டிருந்தார். அநேகமாக இந்த வாய்ப்பு, சொந்த வாழ்க்கையில் இருந்து சில விஷயங்களைப் பகிர்ந்து தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் பிக்பாஸ் டாஸ்க்காக இருக்கலாம். “அப்பாவுக்கு ஹார்பர்ல வேலை. திடீர்னு வேலையில்ல. என்ன பண்றது. காசு கொடுக்கமுடியாதே. வீட்டை விட்டு போயிடுங்கன்னு சொன்னாங்க. ஒருவேளை சாப்பாடுதான் இருக்கும். அதையும் நான் சாப்பிடணும்னு அப்பா சாப்பிடமாட்டார்” என்றார். எல்லாருடைய கண்களிலும் கண்ணீர். 





நேற்றைய எபிசோடில், பாத்திரம் கழுவுறது மட்டும்தான், நீங்க எடுத்திருக்கீங்க இல்லையா என கேட்கும் சின்னப்பொண்ணுவிடம், டம்ப்ளர்லாம் நீங்களே கழுவிக்கணும் என மொக்க ஜோக் அடிக்கிறார் ராஜூ (தம்பி.. தம்பி...) சமைக்கும் பொறுப்பை எடுத்துக்கொண்டார் சின்னப்பொண்ணு. எல்லார் முகத்திலும் அப்படி ஒரு பிரகாசம்.. அப்பாடா சோத்துக்கு பிரச்சனையில்ல என்பதுபோல் தலையாட்டி சிரிக்கிறார் ப்ரியங்கா. உடனே செம்ம எனர்ஜியாக அடுத்த ஸ்லோகன். “நாங்கள்ளாம் ஒன்னானோம், சாப்ட்டு சாப்ட்டு குண்டானோம்”. பவனி ஹவுஸ் க்ளீனிங் எடுத்துக்கொண்டார். எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்காக அங்கு போய் நின்ற நிரூப்தான் பாவம்.. தில்லுவாலே புச்சுடானேச்சாஆஆ..


வெள்ளந்தி தாமரைச்செல்வி வெப் சீரிஸ்னா என்ன என்கிறார். ஸ்வீட்டாக பதில் சொல்றாங்க க்யூட்டி பாவனி. மாஸ்டர் சிபி எப்படி டீ போடுவது என்கிறார். ஐய்க்கி யாரை மாதிரி இருக்காங்கன்னு கண்டுபுடிச்டேன்னு இசைவாணி சொன்னதும், ஜமீன் கோட்டையில ஒரு கிழவி வருவால்ல என்று கமெண்ட் சொன்னார் ராஜு. நானாச்சு ஷாகிராவை நினைச்சேன்னு இசைவாணி சொல்லும்போது, ஷாகிரா இல்லம்மா ஷகிரா என திருத்துகிறார் அபிஷேக். (எல்லாம் பாடி ஷேமிங் கேஸ்ல உள்ள போகப்போறது தெரியாம சிரிச்சுனு இருக்காங்க.. சிரிங்க சிரிங்க) நல்லவேளை அவ்வையார்னு சொல்லாம விட்டான்னு சைட் கமெண்ட் கொடுத்தார் அபிஷேக்.