எவ்ளோ நாளாகிடுச்சு இந்த முதல் நாள், காலை 6.20-ன்னு கேட்டு.. ஓகேய் எபிசோடுக்குள்ள போலாம். எல்லாருக்கும் சகஜமாக முயற்சி பண்ணிட்டு இருக்காங்க. தாமரைச்செல்வி மிகவும் பாசிட்டிவ் வைபை என தருகிறார் என சொல்வதற்கு வந்து, அதற்கான தமிழ் வார்த்தையைத் தேடுகிறார்கள் ஐக்கியும், அக்‌ஷராவும். சிபி நேர்மறை என்று சொல்ல, ஐய்யயோ அது Opposite என்கிறார் அக்‌ஷரா. பாவம் சிபியே கன்ஃப்யூஸ் ஆயிட்டாரு. பின்பு அண்ணாச்சி, நல்ல விதமாக பேசுதல்னு ஒரு புது மீனிங்கைக் கொடுக்க, அதுவும் புரிந்ததுபோலவே தலையாட்டுகிறார் அக்‌ஷரா. இதையெல்லாம் கேட்டுக்கொண்டு, சுத்தமாக புரியாமல் உட்கார்ந்திருக்கிறார் ஜெர்மனி மதுமிதா. (யானை.. யானை..) மொமெண்ட். கண்டிப்பாக ஒரு டிக்‌ஷனரி தேவை எனத் தெரிகிறது.



தாமரைச்செல்வி






பிக்பாஸ் லிவிங் ஏரியாவுக்கு அழைத்ததும், ராஜு மோகன், பாவனி, சின்னப்பொண்ணு, நமீதா மாரிமுத்து, நிரூப் எல்லாரும் கேப்டன்களாக லைன் கட்டுகிறார்கள்.  நான் பாத்ரூம் சுத்தம் பண்றேன்னு ராஜு சொன்னதும், ப்ரியங்கா, இசைவாணி டீம் ஸ்லோகன் ரெடி பண்ணிவிட்டது. “நாங்கள்ளாம் ஒன்னானோம், கக்கூஸ் கழுவி ட்ரெண்ட் ஆனோம்” - ஆக்கா... காலர் ட்யூன்லயே வைக்கலாம் போலருக்கே.. நமீதா பாத்திரம் கழுவும் டீமின் கேப்டனாக தன்னை அறிவித்துக்கொண்டார். “நாங்கள்ளாம் ஒன்னானோம், பாத்திரம் கழுவி ட்ரெண்டானோம்” என்கிறது கேங்.



பாத்திரம் கழுவுறது மட்டும்தான், நீங்க எடுத்திருக்கீங்க இல்லையா என கேட்கும் சின்னப்பொண்ணுவிடம், டம்ப்ளர்லாம் நீங்களே கழுவிக்கணும் என மொக்க ஜோக் அடிக்கிறார் ராஜூ (தம்பி.. தம்பி...) சமைக்கும் பொறுப்பை எடுத்துக்கொண்டார் சின்னப்பொண்ணு. எல்லார் முகத்திலும் அப்படி ஒரு பிரகாசம்.. அப்பாடா சோத்துக்கு பிரச்சனையில்ல என்பதுபோல் தலையாட்டி சிரிக்கிறார் ப்ரியங்கா. உடனே செம்ம எனர்ஜியாக அடுத்த ஸ்லோகன். “நாங்கள்ளாம் ஒன்னானோம், சாப்ட்டு சாப்ட்டு குண்டானோம்”. பவனி ஹவுஸ் க்ளீனிங் எடுத்துக்கொண்டார். எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்காக அங்கு போய் நின்ற நிரூப்தான் பாவம்.. தில்லுவாலே புச்சுடானேச்சாஆஆ..


அணித்தலைவர்கள் எல்லாரும், அவங்கவங்க அணிகளுக்கான நபர்களை, யாருக்கிட்டயும் கலந்து பேசாம தேர்வு செஞ்சு சொல்லணும்” என்கிறார் பிக்பாஸ். ஆரம்பிங்களாங்களா மோடுக்கு வந்துட்டாரு பிக்பாஸ்.. ரைட்டு


அபிஷேக்கையும், தாமரைச்செல்வியையும், வருணையும், அண்ணாச்சியையும் கைகாட்டினார் ராஜூ


அபிநய், இசைவாணி, நடியா சாங், ஐய்க்கி என்றார் பாவனி


ப்ரியங்காவையும், அக்‌ஷராவையும், சிபியையும் கைகாட்டினார் சின்னப்பொண்ணு


மதுமிதாவையும், சுருதியையும், நிரூப்பையும் காட்டினார் நமிதா.


வெள்ளந்தி தாமரைச்செல்வி வெப் சீரிஸ்னா என்ன என்கிறார். ஸ்வீட்டாக பதில் சொல்றாங்க க்யூட்டி பாவனி. ஐய்க்கி யாரை மாதிரி இருக்காங்கன்னு கண்டுபுடிச்டேன்னு இசைவாணி சொன்னதும், ஜமீன் கோட்டையில ஒரு கிழவி வருவால்ல என்று கமெண்ட் சொன்னார் ராஜு. நானாச்சு ஷாகிராவை நினைச்சேன்னு இசைவாணி சொல்லும்போது, ஷாகிரா இல்லம்மா ஷகிரா என திருத்துகிறார் அபிஷேக். (எல்லாம் பாடி ஷேமிங் கேஸ்ல உள்ள போகப்போறது தெரியாம சிரிச்சுனு இருக்காங்க.. சிரிங்க சிரிங்க) நல்லவேளை அவ்வையார்னு சொல்லாம விட்டான்னு சைட் கமெண்ட் கொடுத்தார் அபிஷேக்.


ப்ரியங்கா, ஐய்க்கி, இமான், சுருதி, நடியா சாங்னு எல்லா க்யூட்டிகளும் சேர்ந்து வேறு வேறு எமோஷன்களுக்கு நோ சொல்கிறார்கள். ராஜுவிடம் ஒரு கேங் கதை சொல்ல கேட்கிறது. ஹாரர் கதை சொன்ன ராஜு, அப்படியே கடைசியில் காமெடி ஸோனுக்கு கொண்டு போய்விட்டார். எல்லோரும் பயப்பட ஆரம்பிச்சு, கடைசியில் எல்லோரும் தவழ்ந்து தவழ்ந்து சிரித்தார்கள்.


சண்டைகள் இல்லாத பிக்பாஸ் ரொம்ப ரொம்ப ரேர். ஆனாலும் இன்னைக்கு செம்ம ஜாலி எபிசோட். இப்டியே இருக்கணும்னு வாழ்த்தலாம்தான். பாப்போம்..