அமெரிக்காவிற்கு சென்று திரும்பிய கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருந்தது. இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனையில், அவருக்கு லேசான கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. 


சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கமல்ஹாசன் பூரண குணமடைந்து நேற்று மருத்துவனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார்.  வீட்டுக்கு சென்ற அவர், உடனே  பிக் பாஸ் செட்டிற்கு சென்று இருக்கிறார். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கடந்த வாரம் மட்டும் ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். தொற்றில் இருந்து குணமான கமல், ஓய்வு எடுத்து அடுத்த வாரம் வருவார் என ரசிகர்கள் நினைத்திருக்கையில், யாரும் எதிர்பாராத வகையில் அனைவரின் முன்பு ஆஜராகி அதிர்ச்சி அளித்தார்.


அதோடு மேலும் அதிர்ச்சியாக, பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கமல் அதிகமாக அரசியல் பேசாத நிலையில், நேற்றைய எபிஷோடில் வந்தவுடனையே மறைமுகமாக தனது பாணியில் அரசியல் பேசி அசத்தினார். இமான் அண்ணாச்சியை வைத்து கமல் அரசியல் கருத்துக்களை பேசியுள்ளார். 


கேப்டனாக மாறிய நிரூப் சில போட்டியாளர்களுக்கு சில அதிகாரங்களை கொடுத்து மீண்டும் ஆளுமை டாஸ்கை அரங்கேற்றலாம் என திட்டம் போடுகின்றனர். அப்போது, இமான் அண்ணாச்சி நீங்க சொல்றதை எல்லாம் கேட்கமுடியாது என சண்டை போடுகிறார். அப்போது குறுக்கிட்ட கமல், புதுசாக வரும் தலைமை தப்பாதான் இருக்கும் என நினைத்து தடங்கல் வரக்கூடாது என அண்ணாச்சிக்கு அட்வைஸ் செய்தார். கமல் யாரை குறிப்பிட்டு இந்த அரசியல் கருத்துகளை பேசினார் என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த விஷயமாகும்.


இதனைத்தொடர்ந்து, பிக்பாஸ் வீட்டில் நடந்தவைகளை பற்றியெல்லாம் போட்டியாளர்களிடம் கமல் கேட்டறிந்தார். இந்த வாரம் கேப்டனாக இருந்த நிரூப்பின் கேப்டன்சி எப்படி இருந்தது என்று மற்ற போட்டியாளர்களிடம் கேட்க, மற்றவர்கள் பரவாயில்லை ரகம் எனக்கூற, பிரியங்கா, தாமரை நிரூப் சரியாக கேப்டன்சி செய்யவில்லை என்று கூறினார்.




மேலும், அபிஷேக், பிரியங்காவை இன்ஃபுலியன்ஸ் செய்வதாக அமீர் குற்றம் சாட்டியதற்கு பிரியங்கா மறுப்பு தெரிவித்தார். அன்பு தொடர்பான டாப்பிக் வரும்போது, பேசிய கமல், இது அன்பை காட்டுவதற்கான போட்டி இல்லை. தாங்கள் அன்பை காட்ட வேண்டும் என்றால் போட்டி முடிந்து வெளியே சென்ற பிறகு கூட தொடருங்கள் என்றும், இங்கு உங்கள் கேமை மட்டுமே விளையாட வேண்டும் என்று கூறினார்.


அன்பு, இன்ஃபுலியன்ஸ் தொடர்பாக கமலிடமே எதிர்த்த தோனியில் பேசும் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த கமல், நான் ஸ்டிராங்கான பிளேயர் நாம் சொல்லிக்கொள்ளக்கூடாது மக்கள் சொல்ல வேண்டும் என்று கமல் கூற, அதன்பிறகு நான் என்ன செய்ய வேண்டும் அமைதியாக கேட்ட பிரியங்காவை கண்டுகொள்ளாமல், அமீரிடம் சமசரம் செய்யாமல் உங்கள் கேமை விளையாடுங்கள் என்று கூறினார். கடைசியாக தான் வைக்கும் விமர்சனங்கள் எல்லாமே உங்களுக்கான துருப்புச்சீட்டு, வெளியில் இருந்து வரும் கருத்துக்களை வைத்து அதை துருப்புச்சீட்டாக உங்களுக்கு கொடுக்கிறேன் என்று கூறினார்.


 


மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


 


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடிபில் வீடியோக்களை காண