பிக்பாஸ் வீட்டிற்குள், தனலட்சுமி ஷெரினாவை  தள்ளிவிட்டது பூதாகரமாக வெடித்திருக்கும் நிலையில், அந்த சம்பத்தை ட்ரோல் செய்யும் விதமாக நெட்டிசன்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். 


விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸின்  6 வது சீசன் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கியது. இதில் ஜி.பி.முத்து, பாடகர் அசல் கோலார், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன், சாந்தி அரவிந்த், சீரியல் நடிகர் முகமது அசிம், சீரியல் நடிகை ஆயிஷா, ஷெரின் ஷாம், மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரக்‌ஷிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம், விஜே மகேஸ்வரி, அமுதவாணன், நடனக் கலைஞர் மணிச்சந்திரா, விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, சிங்கப்பூர் மாடல் நிவாசினி, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன்,மைனா நந்தினி ஆகியோர் பங்கெடுத்துள்ளனர். 


 







பொதுவாக ஆரம்ப நாட்களில் சுமூகமாகவும், அதற்கு பின்னரான நாட்களில் சர்ச்சையாக செல்வதுதான் பிக்பாஸ் நிகழ்ச்சியின் வழக்கம். ஆனால், இந்த முறை கொஞ்சம் மாறுதலாக, ஆரம்பம் முதலே சர்ச்சையின் களமாக மாறியிருக்கிறது பிக்பாஸ். அவ்வப்போது சிறு சிறு சண்டைகளாவும், உரசல்களாவும் சென்று கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், உச்சக்கட்ட சண்டையாக அசிம் ஆயிஷா சண்டை மாறியது. அந்த வரிசையில் பிக்பாஸ் வீட்டின் அடுத்த சம்பவமாக மாறி இருக்கிறது தனலெட்சுமி -ஷெரினா தள்ளுமுள்ளு. 


பொம்மை டாஸ்க்கில் நடந்த தள்ளுமுள்ளுவில் ஷெரினாவும் நிவாவும் கிழே விழுந்தனர். இதில் ஷெரினாவிற்கு பின்னந்தலையில் அடிப்பட்டு விட்டது. இதைப்பார்த்த அசிம் தனலட்சுமியை பார்த்து ஆவேசமாக கத்த, பிக்பாஸ்  ‘கேமாராவில் செக் பண்ணுங்க’ என்றார் தனம். இதனையடுத்து மருத்துவ குழுவிடம் ஷெரினாவை ஒப்படைத்த அசிம், உனக்கு அறிவு இருக்கிறதா?  நீயும் ஒரு பெண்தானே.. என்று தனலட்சுமியிடம் பொங்கி எழ, அதற்கு அவர்  ரியாக்ஷன் கொடுக்கவே இல்லை. 


வழக்க போல சம்பவம் செய்து விட்டு புலம்பும் தனம் இதிலும் கமல் சார் வரட்டும், நான் குறும்படம் கேக்குறேன்.. நான் செய்தது தவறு என்றால் நான அனைவரிடமும் மன்னிப்பு கேட்கிறேன். இல்லை என்றால் இவர்கள் அனைவரும் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பொங்கி எழுந்தார். இந்த நிலையில் இந்த சம்பவத்தை ட்ரோல் செய்யும் விதமாக நெட்டிசன்கள் வீடியோக்களை ஷேர் செய்து வருகின்றனர். 


 


 






 


 






 














இந்த சம்பவத்தில், ஜனனி பொம்மையை தனது கையில் வைத்துக்கொண்டு, கேமை ஸ்டார்ட் செய்வதாக சொன்ன ஷெரினாவிற்கு தனலட்சுமி தகுந்த பதிலடி கொடுத்து விட்டதாகவும், தனலட்சுமி கேமை சூப்பராக ஆடுவதாகவும் நெட்டிசன்கள் வீடியோக்களை ஷேர் செய்து வருகின்றனர்.