விஜய்டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி, இந்த ஆண்டு சீசன் 6யை எட்டியுள்ளது. தொடங்கிய இரு வாரத்தில் போட்டியாளர்களின் மோதலால் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நாளுக்கு நாள் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலாச்சார சீரழி நடப்பதாக கூறி அந்த நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என தேசிய முன்னேற்ற கழகம் வலியுறுத்தியுள்ளது. இதோ அக்கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் ஜி.ஜி.சிவா வெளியிட்டுள்ள அறிக்கை :
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி துவங்கி இன்னும் முன்று வாரம் கூட சரியாக முடிவடையாத நிலையில், சில போட்டியாளர்கள் இடையே காதல் கதை தொடங்கியுள்ளது. இந்த முறை பிக்பாஸ் 6 நிகழ்ச்சியில் சுமார் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டு விளையாடி வருகிறார்கள். போட்டியாளர்கள் அதிகம் என்பதால், அவர்களுக்கு இடையில் உள்ள… கருத்து வேறுபாடுகளும் கொஞ்சம் அதிகமாகவே உள்ளது.
போட்டியாளர் அசல் கோலார்… இவர் குயின்சியின் கையை பிடித்துக்கொண்டு செய்த செயலால் வீடியோவில் சிக்கினார்.
மேலும், மைனா நந்தினி, ஜனனி ஆகியோரையும் அசல் எல்லை மீறித் தொட்ட வீடியோக்களை சமூகவலைதளங்களில் பரப்பி, அசலின் அத்துமீறால் தொடர்பாக கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நிவா – அசல் ஆகியோரிடையே காதல் உருவாகி, அவர்கள் அத்துமீறி நடந்து கொள்ளும் வீடியோ வெளியாகியுள்ளது. தமிழக கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில், சண்டை, சச்சரவு காட்சிகள் அதிக அளவில் நாளுக்கு நாள் பிக்பாஸ் சீசன் 6-ல் இடம் பெற்று வருகிறது. நிகழ்ச்சி என்ற பெயரில் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என தனியார் தொலைக்காட்சி நிர்வாகம் நினைத்து கொண்டு இருக்கிறது.
சமுதாய சீர்திருத்தம் என்பது அனைவரும் பொறுப்பு உள்ளது. அந்த சமூக பொறுப்பை உணர்ந்து விஜய் தொலைக்காட்சி குழுமம் செயல்பட வேண்டுமென தேசிய முன்னேற்ற கழகம் சார்பில் கேட்டு கொள்கிறேன். அதே நேரத்தில் பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளால் குழந்தைகளிடையே தவறான எண்ணத்தை விதைக்க முற்படும் செயலுக்கு தடை விதிக்கும் வகையில் பிக்பாஸ் 6 நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டுமெனவும் தேசிய முன்னேற்ற கழகம் சார்பில் தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைக்கிறேன்,’’
என்று அந்த அறிக்கையில் ஜிஜி சிவா குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்